Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மே, 2022

வங்கி சேவையில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. கொஞ்சம் கவனமா இருங்க!

மே மாதம் முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜூன் மாதம் தொடங்க சில நாட்களே உள்ளன. ஜூன் மாதம் முதல் வங்கி சேவையில் சில மாற்றங்கள் வரவுள்ளன.

ஆக இதனால் இதனால் சாமானியர்களுக்கு என்ன பலன். என்னவெல்லாம் மாறவிருக்கின்றன. வாருங்கள் பார்க்கவிருக்கிறோம்.

குறிப்பாக எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட சிலவற்றில் பல மாற்றங்கள் வரவிருக்கின்றன.

எஸ்பிஐ வீட்டுக் கடன் விகிதம்

எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் EBLR விகிதமானது 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 7.05% ஆக அதிகரித்துள்ளது. இதே RLLR விகிதம் 6.65% ஆக இருக்கும். அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதமானது ஜூன் 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் இனி வீட்டுக் கடன் வாடிக்கையாளார்களுக்கு மாத மாதம் செலுத்தும் தவணை தொகை அதிகரிக்கலாம்.இது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை தரலாம்.

ஆக்சிஸ் சேமிப்பு கணக்கு கட்டணங்கள்

தனியார் துறையை சேர்ந்த ஆக்சிஸ் வங்கியானது அதன் சம்பளதார்காள் மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு சேவைக் கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் சேமிப்பு கணக்குகளுக்கு சராசரி மாத இருப்பு தொகையானது உயர்த்தப்பட்டுள்ளது. இது 15,000 ரூபாயில் இருந்து, 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல லிபர்டி சேமிப்பு கணக்குகளுக்கு சராசரி மாத இருப்பு தொகை 15000 ரூபாயில் இருந்து, 25000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் வங்கி - அபராதம்

இதில் குறைந்தபட்சம் மினிமம் பேலன்ஸ் இல்லாததற்கு மாதம் குறைந்தபட்சம் 75 ரூபாயும், அதிகபட்சமாக 600 ரூபாயும் வசூலிக்கப்படும், செமி அர்பன் பகுதிகளில் அதிகபட்சமாக 300 ரூபாயும், கிராமப்புறங்களில் 250 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கில் என்ன மாற்றம்

அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு புதிய சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சலக கணக்கின் மூலம் ஆதார் மூலமான பரிவர்த்தனைகளை (AePS) சேவைகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 3 AePS சேவைகளுக்குமட்டுமே இலவசமாக பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

அஞ்சலக சேமிப்பு கணக்கில் கட்டணம்

அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஜூன் 15,2022 முதல் அமலுக்கு வரலாம். இதில் கேஸ் டெபாசிட், மினி ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்தல், பணம் டெபாசிட் செய்தல் என அனைத்திற்கும் 20+ ஜிஎஸ்டி கட்டணமாக விதிக்கப்படலாம். இதில் மினி ஸ்டேட்மெண்ட்டுக்கு 5 ரூபாய்+ ஜிஎஸ்டியும் கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக