Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 30 மே, 2022

சிரிக்க ரெடியா? இன்றைய காமெடிகள்... இன்றைய தகவல்கள்

-------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------
ராமு : பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம் பண்ணீங்களே.. பொண்ணு எப்படி இருக்கா?
சோமு : அவ நல்லாத்தான் இருக்கா.. மாப்பிள்ளைதான் 50 லட்ச ரூபாய் தர்றேன்.. என்னைக் காப்பாத்துங்க மாமான்னு கெஞ்சறான்!
ராமு : 😂😂
-------------------------------------------------------
விமல் : காஞ்சிபுரம் இட்லி கேட்டு 1 மணி நேரம் ஆகுது.. இன்னும் வரலையே..
சர்வர் : காஞ்சிபுரம் என்ன பக்கத்துலயா இருக்கு.. உடனே கொண்டு வர..
விமல் : 😥😥
-------------------------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------------------------
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

விளக்கம்:

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
-------------------------------------------------------
கொத்தமல்லி இலையும்.. அதன் பயன்களும்...!!
-------------------------------------------------------
🌿 கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.

🌿 சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும். வயிறு மற்றும் குடல் உறுப்புகள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது.

🌿 கொத்தமல்லி இலை நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம்.

🌿 தோல் தடிப்பு, அரிப்பு, இதர சருமம் தொடர்பான வியாதிகளுக்கு கொத்தமல்லி இலைகளை அரைத்து அதை தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.

🌿 தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்து கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும்.

🌿 கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் ஆகும்.

🌿 கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.

🌿 கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக