ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India) ஆனது, வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு (Non-bank entities) பாரத் பில் பேமென்ட் ஆப்ரேட்டிங் யூனிட்களை அமைப்பதற்கான நிகர மதிப்பு தொடர்பான விதிமுறைகளை தளர்த்தி உள்ளது.
இந்த பிரிவின் கீழ் இணைய அதிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆர்பிஐ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, நிகர மதிப்பு ரூ.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, நான்-பேங்க் பாரத் பில் பேமென்ட் ஆப்ரேட்டிங் யூனிட்க்கான (Bharat Bill Payment Operating Units -BBPOU) அங்கீகாரம் பெற ரூ.100 கோடி நிகர மதிப்பு தேவைப்படுகிறது.
பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (Bharat Bill Payment System - BBPS) என்பது பில்லிற்கு பணம் செலுத்துவதற்கு இயங்கக்கூடிய ஒரு தளமாகும், மேலும் பிபிபிஎஸ் இன் நோக்கம் மற்றும் கவரேஜ் தொடர்ச்சியான பில்களை உயர்த்தும் அனைத்து வகை பில்லர்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. "வங்கி அல்லாத பாரத் பில் பேமென்ட் ஆப்பரேட்டிங் யூனிட்டுகளுக்கு (பிபிபிஓயு) குறைந்தபட்ச நிகர மதிப்புத் தேவை ரூ.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது" என்று இந்திய ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிபிபிஎஸ்-இன் கீழ் பயனர்கள் தரப்படுத்தப்பட்ட பில் செலுத்தும் அனுபவம், மையப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் குறைகளைத் தீர்க்கும் வழிமுறை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வாடிக்கையாளர் வசதிக் கட்டணம் போன்ற பலன்களை அனுபவிக்கின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஆனது ஏப்ரல் மாதத்தில் மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்ட நிகர மதிப்புத் தேவைகள் குறைப்பை தொடர்ந்து வெளியாகி உள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். பிபிபிஎஸ் பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் உள்கட்டமைக்கப்பட்ட பில்லர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டாலும், வங்கி அல்லாத பிபிபிஓயு-களின் எண்ணிக்கையில் அதற்கேற்ற வளர்ச்சி காணப்படவில்லை என்று ஆர்பிஐ கூறி உள்ளது.
வங்கி அல்லாத பிபிபிஓயு-க்கு அங்கீகாரம் பெற ரூ. 100 கோடி நிகர மதிப்பு தேவைப்படுவது அதிக பங்கேற்புக்கு ஒரு தடையாக பார்க்கப்பட்டது. பங்கேற்பை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி, வங்கி அல்லாத பிபிபிஓயு-களின் நிகர மதிப்புத் தேவையை சீரமைக்க வாடிக்கையாளர் நிதிகளைக் கையாளும் மற்றும் இதேபோன்ற ரிஸ்க் ப்ரொஃபைல் கொண்ட பிற வங்கி அல்லாத பங்கேற்பாளர்களுடன் கூட்டு சேர முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக