Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஜூன், 2022

பீரியட்ஸ் நாட்களில் வலி சமாளிக்க பாதாமையும் வாழைப்பழத்தையும் இப்படி சாப்பிடுங்க

ஒரு பெண் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், எந்த அளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும், எந்த அளவுக்கு வலிமை மிகுந்தவராக இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் வரும் இந்த மாதவிலக்கு காலத்தின் போது சற்று சிரமங்களை எதிர்கொண்டாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, மாதவிலக்கு நாட்களில் முதல் இரண்டு நாட்களில் வயிற்றுப் பிடிப்பு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் தீராத ஒன்றாக நீடிக்கும்.

இது தவிர சில பெண்களுக்கு குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு மிகச் சரியான ஓய்வு தேவை. அதற்காகத் தான் இன்றைக்கு பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான மாதவிலக்கு விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம், தவிர்க்க முடியாத காரணங்களால் அனேக நேரங்களில், மாதவிலக்கு காலத்திலும் பெண்கள் பணி செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே சமயம், இந்த இக்கட்டான சூழலில் மாதவிலக்கு சார்ந்த வலியை எதிர்கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பெண்கள் மேற்கொள்வது கட்டாயமாகிறது.

பாதாம் பருப்பு மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி

மாதவிலக்கு கால வயிற்றுப் பிடிப்பு பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வை தருகிறது என்பதோடு மட்டுமல்லாமல், சுவை அளவிலும் சிறப்பானதாக இருக்கிறது. இப்போது இந்த ஸ்மூத்தி தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை

வாழைப்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ளவும். அதில் 350 மில்லி அளவுக்கு இனிப்பு இல்லாத பால், இரண்டு டீ ஸ்பூன் புளிக்காத தயிர், ஒரு டீ ஸ்பூன் பாதம் பட்டர், இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு சப்ஜா விதைகள், ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் பொடி ஆகியவை சேர்த்து கலக்கி குடிக்கவும். இது உங்கள் மாதவிலக்கு வலி குறைய உதவிகரமாக இருக்கும்.

என்னென்ன சத்துக்கள் உண்டு

பாதாமில் விட்டமின் இ இருக்கிறது. அது தசைப்பிடிப்புகளை கட்டுப்படுத்த உதவும். வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் சத்து என்பது தசைகள் ரிலாக்ஸாக இருக்க உதவும். அதேபோன்று சப்ஜா விதைகள் என்பது ஹார்மோன் அளவை சீராக வைத்திருக்க உதவும்.

ராஸ்பெர்ரி இலை மற்றும் இஞ்சி டீ

ஒரு சின்ன பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் ராஸெர்ரி இலை மற்றும் இஞ்சி சேர்த்து, லேசான தீயில் சுமார் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது இதை வடிகட்டி ஆறிய பிறகு அருந்தலாம்.

எப்படி நிவாரணம் கிடைக்கும்

மகளிர் நலனை மேம்படுத்த மிகச் சிறந்த மூலிகைப் பொருளாக ராஸ்பெர்ரி இலை இருக்கிறது. இஞ்சி இயற்கையாகவே வலி நிவாரணியாக செயல்படக் கூடியது. அது வயிறு இரைச்சல் மற்றும் வலி போன்றவற்றை தடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக