Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

கணவரை திருப்திபடுத்த; சந்தோஷமாக வைத்து கொள்ள மூன்று பெண்கள் தேவை - மனைவி வினோத விளம்பரம்

தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை சந்தோஷமாக வைத்து கொள்ளவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.அவர்களுக்கு சம்பளமாக ரூ. 33,800 நிர்ணயித்து உள்ளார்.

ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் பேசிய அவர்,

 "என்னுடைய கணவனை கவனித்து கொள்வதற்கு மூன்று பெண்கள் தேவை. அவர்கள் அழகாகவும், இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

உங்களுக்கு மாதம் ரூ.33,800 சம்பளம் கிடைக்கும், இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்க கூடாது, அது ஒரு தடையாக அமையும். என் கணவர் மிகவும் கடுமையாக உழைப்பவர். அவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன். அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்து கொள்ள எனக்கு ஆட்கள் தேவை." எனக் கூறியுள்ளார்.

இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலானது இது குறித்து அவரது கணவர் பட்டகோர்ன் ஆச்சரியமடைந்தார். அவர் கூறியதாவது:-

"என்னைக் கவனித்துக் கொள்ள யாரையாவது தேர்வு செய்ய வேண்டும் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள். "அந்த பெண்களும் எங்கள் குடும்ப பெண்கள் போலவே நடத்தப்படுவார்கள், மேலும் எங்கள் நிறுவனத்தில் குடும்ப பெண்கள் போலவே வேலை செய்வார்கள்.

என்னைப் போல் இருக்க விரும்பும் மற்ற ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் இது பற்றித் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் மனைவிகளிடம் அனுமதி கேட்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் இருக்காது என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக