Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

பூமியை அழிவில் இருந்து காக்க நாசா மேற்கொள்ளும் DART மிஷன்!


பூமியை நோக்கி சிறுகோள் வருவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. சிறுகோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது அதன் திசையில் எந்த மாற்றமும் இல்லை என்றால் பூமிக்கு பேரழிவு நிச்சயம். எனவே சிறுகோள் பூமியை தாக்காமல் விலகி செல்லும் வகையில், அதன் திசையை மாற்ற, நாசா கடந்த ஆண்டு DART மிஷனை அறிமுகப்படுத்தியது. 

அடுத்த மாதம் 26ம் தேதி இந்த விண்கலம் சிறுகோளை தாக்கி அதன் திசையை மாற்ற உள்ளது. சிறுகோள் தாக்குதலில் இருந்து பூமியைப் பாதுகாக்க, இந்த விண்கலம் தொலைதூரத்தில் வட்டமிடும் சிறுகோள் மீது மோதும். 

இந்த விண்கலம் மணிக்கு 23,760 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சிறுகோள் மீது மோதும். அதனால் சிறுகோளின் திசையில் ஏற்படும் மாற்றத்தை பதிவு செய்ய முடியும். இதனுடன், மோதல் திசையை மாற்றுமா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும். 

இது தவிர, மோதலின் போது சிறுகோளின் வளிமண்டலம், உலோகம், தூசி, மண் போன்றவை ஆய்வு செய்யப்படும்.

டார்ட் மிஷன் பணியின் பெயர் இரட்டை சிறுகோள் திசைமாற்ற சோதனை ( Double Asteroid Redirection Test - DART). இந்த வேலை செய்யும் நுட்பம் கைனடிக் இம்பாக்டர் டெக்னிக் (Kinetic Impactor Technique)ன்று அழைக்கப்படுகிறது.

பூமியை நோக்கி வரும் சிறுகோள் மீது மோதி விண்கலத்தின் திசையில் மாற்றும் வகையில் இந்த நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

DART விண்கலம் மூலம் நாசா தாக்கும் சிறுகோள் Didymos என்று பெயரிடப்பட்டுள்ளது. டிடிமோஸ் சிறுகோள் 2600 அடி விட்டம் கொண்டது. அதைச் சுற்றி ஒரு சிறிய நிலவு போன்ற கல்லும் வட்டமிடுகிறது. 

இந்த நிலவின் பெயர் Dimorphos. இதனுடன் வாகனம் மோதும் நிலை ஏற்படும். இதன் விட்டம் 525 அடி. இந்த சிறிய நிலவு போன்ற கல்லை நாசா குறிவைக்கும். 

நாசாவின் விண்கலம் மணிக்கு சுமார் 24,000 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சிறுகோள் மீது மோதும். இந்த மோதலுக்குப் பிறகு, சிறுகோள் அதன் திசையை மாற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (PDCO) வழிகாட்டுதலின் கீழ் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகம் (APL) இந்த பணியை மேற்கொள்கிறது.

நாசாவால் பதிவு செய்யப்பட்ட பூமிக்கு அருகில் உள்ள பொருட்களில், 460 அடிக்கு மேல் விட்டம் கொண்ட சில சிறுகோள்கள் உள்ளன. இந்த அளவு கல் அமெரிக்காவின் மீது விழுந்தால், ஒரு மாநிலத்தையே முழுமையாக அழித்துவிடும். 

கடலில் விழுந்தால் பெரிய சுனாமி ஏற்படலாம். ஆனால், பூமியைச் சுற்றி வரும் 8000 கற்களில் ஒன்று கூட அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியைத் தாக்காது என நாசா உறுதி அளித்துள்ளது. DART பணி நவம்பர் 2021 இல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக