அப்படி ஒருசில முறை செய்தால் உடல்நலத்துக்கு பிரச்னை வராது. ஆனால் மாதத்தில் பல நாள்களில் பலர் சாப்பிடாமேலேயெ தூங்குகிறார்கள். இது அவர்களது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கும்.
மெலிந்த உடல்வாகுவை பெற விரும்புபவர்கள் தினமும் ஐந்து, ஆறு முறை உணவை பிரித்து கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். அப்படி சம இடைவெளியில் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். இரவு உணவை தவிர்த்தால் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும். அவ்வாறு செய்வதன் மூலம் ஓரிரு கிலோ உடல் எடையை குறைக்க நேரிடலாம்.
ஆனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கிடைக்காது.
எந்த அளவுக்கு உணவு உண்பதை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு உடல் எடை குறையும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், தேவையான நேரத்தில் சாப்பிடுவதும்தான் எடை குறைவதற்கு வழிவகுக்குமே தவிர இரவு உணவு தவிர்ப்பதால் அது நடக்காது.
மேலும், இரவு உணவை தவிர்த்தால் பசிதான் அதிகரிக்கும். அதன் காரணமாக காலையில் எழுந்தவுடன் வழக்கத்தைவிட கூடுதலாக உணவை சாப்பிட்டுவிடுவீர்கள். அது உடலில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும்.
சாப்பிடாமல் தூங்குவது உடலுக்கு சக்தி வழங்கும் 'ஸ்டெமினாவை' குறைக்கும். காலையில் உணவு உட்கொள்வது நீண்ட நேரம் உடலுக்கு வலிமையை கொடுக்கும்.
ஆனால் இரவு உணவை தவிர்த்தால் இரவு முழுவதும் உடல் சோர்வடைவதற்கு வழிவகுக்கும். இரவிலும் உடலுக்கு ஆற்றல் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரவில் சாப்பிட விருப்பம் இல்லாதபட்சத்திலும் கூட பிடித்தமான உணவை குறைந்த அளவாவது சாப்பிட வேண்டும். இரவு உணவைத் தவிர்ப்பது உடலில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
ஏனென்றால் இரவு நேரத்தில்தான் அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடல் உறிஞ்சும். அவை ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் வயிறு ஒருபோதும் வெறுமையாக இருப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக