மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்னும் ஊரில் அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் குத்தாலம் உள்ளது. குத்தாலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தல மூலவரான உத்தவேதீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் அரும்பன்ன வனமுலையம்மன் அழகாக காட்சியளிக்கின்றாள்.
இத்தலமானது ஒரு பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்த தலம் ஆகும்.
சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து இருந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றது தனிச்சிறப்பு.
கருவறை வெளிச்சுற்றில் நவகிரகம், மங்கள சனீஸ்வரர், பைரவர், விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், ஆரியன் ஆகியோர் உள்ளனர்.
இவர்களுக்கு அருகே லிங்கத் திருமேனிகளும், 63 நாயன்மார்களும் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னதி காணப்படுவது தனிச்சிறப்பு.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தியை காணலாம்.
கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். நந்தியை கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100வது தேவாரத்தலம் ஆகும்.
இத்தலத்தில் மகாலட்சுமி மற்றும் சபாநாயகருக்கு சன்னதிகள் உள்ளன.
கருவறை கோஷ்டத்தில் அடிமுடி காணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தில் தடை உள்ளவர்களும், உடலில் உள்ள பிணி நீங்கவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் இறைவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக