Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

06-02-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தை 23 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : பிற்பகல் 12.36 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 04.17 வரை கேட்டை பின்பு மூலம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 04.17 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 கிருத்திகை 

பண்டிகை

🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் வாகனத்தில் புறப்பாடு.

🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் ஆகியோர் கண்ணாடி மாளிகைக்கு எளுந்தருளல்.

🌷 ஸ்ரீரங்கம் நம்பெருமான் சந்தன மண்டபத்தில் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

வழிபாடு

🙏 பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

💥 ஏகாதசி

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 விதை விதைக்க உகந்த நாள்.

🌟 பாதாள சாக்கடை தோண்டுவதற்கு சிறந்த நாள்.

🌟 பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏற்ற நாள்.

🌟 சுபகாரிய செயல்களை செய்வதற்கு நல்ல நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★:::::::::::::::::::::::::: 
மேஷ லக்னம் 10.30 AM முதல் 12.13 PM வரை 

ரிஷப லக்னம் 12.14 PM முதல் 02.16 PM வரை 

மிதுன லக்னம் 02.17 PM முதல் 04.27 PM வரை

கடக லக்னம் 04.28 PM முதல் 06.36 PM வரை 

சிம்ம லக்னம் 06.37 PM முதல் 08.39 PM வரை

கன்னி லக்னம் 08.40 PM முதல் 10.41 PM வரை

துலாம் லக்னம் 10.42 PM முதல் 12.48 AM வரை

விருச்சிக லக்னம் 12.49 AM முதல் 02.59 AM வரை

தனுசு லக்னம் 03.00 AM முதல் 05.07 AM வரை 

மகர லக்னம் 05.08 AM முதல் 07.04 AM வரை

 கும்ப லக்னம் 07.05 AM முதல் 08.46 AM வரை 

மீன லக்னம் 08.47 AM முதல் 10.25 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
       இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலை சார்ந்த முயற்சிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். கவலை குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : மதிப்பு அதிகரிக்கும்.
பரணி : ஆர்வம் ஏற்படும். 
கிருத்திகை : வாய்ப்பு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயத்தை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையைக் கடைபிடிக்கவும். குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். ஜாமீன் விஷயங்களில் ஈடுபட வேண்டாம். பரிவு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கிருத்திகை : செலவுகள் அதிகரிக்கும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும். 
---------------------------------------
மிதுனம்

வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 

மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும். 
புனர்பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
கடகம்

சில உதவிகளின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தினரின் குணமறிந்து செயல்படவும். எண்ணிய செயல்கள் சில தடைகளுக்கு பின் முடிவடையும். ஓய்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை

புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும். 
பூசம் : வாய்ப்பு கிடைக்கும். 
ஆயில்யம் : குணமறிந்து செயல்படவும். 
---------------------------------------
சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். சமூகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பாசம் நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

மகம் : ஆர்வம் ஏற்படும். 
பூரம் : செல்வாக்கு மேம்படும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
---------------------------------------
கன்னி

சுபகாரியம் கைகூடுவதற்கான சூழல் உண்டாகும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சக ஊழியர்களால் மனஅமைதி உண்டாகும். அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆசை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம்

உத்திரம் : தெளிவு ஏற்படும்.
அஸ்தம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.
---------------------------------------
துலாம்

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தவிர்ப்பது நல்லது. வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். கடன் சார்ந்த விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

சித்திரை : ஈடுபாடு உண்டாகும். 
சுவாதி : தேவைகள் பூர்த்தியாகும். 
விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
விருச்சிகம்

இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் உற்சாகம் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நட்பு மலரும். தேர்ச்சி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : நட்பு மலரும். 
---------------------------------------
தனுசு

வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். அரசு பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படவும். முயற்சி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : புரிதல் அதிகரிக்கும். 
பூராடம் : விவேகம் வேண்டும். 
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
மகரம்

திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். நினைத்த சில பணிகளில் தாமதம் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றமான நாள்.
அவிட்டம் : சிந்தனை மேம்படும். 
---------------------------------------
கும்பம்

மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். துன்பம் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : ஆர்வம் உண்டாகும். 
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
மீனம்

நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் மரியாதை மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். பெரியோர்களின் சந்திப்பால் மனமாற்றம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். அலுவகத்தில் சில நெளிவு, சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : மரியாதை மேம்படும்.
உத்திரட்டாதி : சாமர்த்தியம் பிறக்கும். 
ரேவதி : ஆதாயம் ஏற்படும். 
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக