Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 21 மார்ச், 2025

21-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, பங்குனி 7 
நாள் - சம நோக்கு நாள்
பிறை - தேய்பிறை

திதி

கிருஷ்ண பக்ஷ சப்தமி - Mar 21 02:45 AM – Mar 22 04:24 AM

கிருஷ்ண பக்ஷ அஷ்டமி - Mar 22 04:24 AM – Mar 23 05:23 AM

நட்சத்திரம்

கேட்டை - Mar 20 11:31 PM – Mar 22 01:45 AM

மூலம் - Mar 22 01:45 AM – Mar 23 03:23 AM

கரணம்

பத்திரை - Mar 21 02:45 AM – Mar 21 03:39 PM

பவம் - Mar 21 03:39 PM – Mar 22 04:24 AM

பாலவம் - Mar 22 04:24 AM – Mar 22 04:59 PM

யோகம்

ஸித்தி - Mar 20 06:19 PM – Mar 21 06:41 PM

வ்யதீபாதம் - Mar 21 06:41 PM – Mar 22 06:36 PM

வாரம்

வெள்ளிக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:26 AM
சூரியஸ்தமம் - 6:27 PM

சந்திரௌதயம் - Mar 22 12:09 AM
சந்திராஸ்தமனம் - Mar 22 11:59 AM

அசுபமான காலம்

இராகு - 10:56 AM – 12:26 PM
எமகண்டம் - 3:26 PM – 4:56 PM
குளிகை - 7:56 AM – 9:26 AM

துரமுஹுர்த்தம் - 08:50 AM – 09:38 AM, 12:50 PM – 01:38 PM

தியாஜ்யம் - 05:38 AM – 07:23 AM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:02 PM – 12:50 PM

அமிர்த காலம் - 04:08 PM – 05:53 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:50 AM – 05:37 AM

ஆனந்ததி யோகம்

சரம் Upto - 01:45 AM
திரம்

வாரசூலை

சூலம் - West
பரிகாரம் - வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் மீனம் ராசியில்

ந்திர ராசி

மார்ச் 22, 01:45 AM வரை விருச்சிகம் ராசி, பின்னர் தனுசு

________________________________
வெள்ளி ஹோரை
________________________________
காலை

06:00 - 07:00 - சுக் - சுபம்
07:00 - 08:00 - புத - சுபம்
08:00 - 09:00 - சந் - சுபம்
09:00 - 10:00 - சனி - அசுபம்
10:00 - 11:00 - குரு - சுபம்
11:00 - 12:00 - செவ் - அசுபம்
                                               
பிற்பகல்

12:00 - 01:00 - சூரி - அசுபம்
01:00 - 02:00 - சுக் - சுபம்
02:00 - 03:00 - புத - சுபம்
        
மாலை 

03:00 - 04:00 - சந் - சுபம்
04:00 - 05:00 - சனி - அசுபம்
05:00 - 06:00 - குரு - சுபம்
06:00 - 07:00 - செவ் - அசுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

________________________________
இன்றைய ராசி பலன்கள்
________________________________

மேஷம்

செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் கவனக்குறைவு ஏற்படலாம். விளையாட்டு போட்டிகளில் சில மாற்றமான அனுபவம் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம் ஆகும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்

சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். சிற்றின்ப செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கங்கள் அதிகரிக்கும். மலர் வியாபாரத்தில் லாபங்கள் உருவாகும். சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் உருவாகும். ஆதரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : ஆசைகள் பிறக்கும்.
ரோகிணி : வேறுபாடுகள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
---------------------------------------
மிதுனம்

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் 

மிருகசீரிஷம் : உதவிகள் சாதகமாகும். 
திருவாதிரை : பொறுப்புகள் குறையும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.
---------------------------------------
கடகம்

புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கலை தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : தடைகள் குறையும். 
பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். மனதை உறுத்தி வந்த கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான செல்வாக்கு மேம்படும். மக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

மகம் : நம்பிக்கைகள் அதிகரிக்கும். 
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். பணி தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். சிறு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் காரிய வெற்றி ஏற்படும். செலவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 

உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும். 
அஸ்தம் : பொறுமை வேண்டும். 
சித்திரை : குழப்பமான நாள்.
---------------------------------------
துலாம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும். தொழில் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம் 

சித்திரை : குழப்பம் மறையும்.
சுவாதி : நெருக்கடிகள் குறையும். 
விசாகம் : தேவைகள் பூர்த்தியாகும்.
---------------------------------------
விருச்சிகம்

தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். தற்பெருமை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். கால்நடை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த செயல்களை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான விஷயங்களை சிந்தித்து செயல்படுத்துவீர்கள். கவலை மறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 
கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
தனுசு

எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும். தம்பதிகளிடம் அனுசரித்துச் செல்லவும். ரகசியமான சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் அமைதியின்மையும் ஒருவிதமான போராட்டமும் உருவாகும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : புதுமையான நாள்.
உத்திராடம் : அமைதியின்மையான நாள்.
--------------------------------------
மகரம்

அரசு பணிகளில் இருந்து வந்த கால தாமதங்கள் குறையும். விவசாய பணிகளில் மேன்மையான சூழல்கள் ஏற்படும். கல்வி பணிகளில் மாற்றங்கள் உருவாகும். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : தாமதங்கள் குறையும்.
திருவோணம் : மாற்றங்கள் உருவாகும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கும்பம்

வியாபார பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனம் மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மை ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான தருணங்கள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

அவிட்டம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
மீனம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சிறு சிறு மாற்றங்கள் மூலம் லாபகரமான வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : மந்தத்தன்மை அகலும். 
உத்திரட்டாதி : நெருக்கம் உண்டாகும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
-------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!