🔆 திதி : காலை 09.45 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி.
🔆 நட்சத்திரம் : அதிகாலை 02.57 வரை பூராடம் பின்பு உத்திராடம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.34 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 ரோகிணி, மிருகசீரிஷம்
பண்டிகை
🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
வழிபாடு
🙏 சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள்:
💥 சிவராத்திரி
💥 சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கட்டிடம் கட்டுவதற்கு சிறந்த நாள்.
🌟 சாந்தி பரிகாரம் செய்வதற்கு ஏற்ற நாள்.
🌟 வழக்குகளை ஆரம்பிக்க உகந்த நாள்.
🌟 நீதிமன்ற பணிகளை மேற்கொள்வதற்கு நல்ல நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 10.23 AM முதல் 12.06 PM வரை
ரிஷப லக்னம் 12.07 PM முதல் 02.08 PM வரை
மிதுன லக்னம் 02.09 PM முதல் 04.19 PM வரை
கடக லக்னம் 04.20 PM முதல் 06.29 PM வரை
சிம்ம லக்னம் 06.30 PM முதல் 08.32 PM வரை
கன்னி லக்னம் 08.33 PM முதல் 10.33 PM வரை
துலாம் லக்னம் 10.34 PM முதல் 12.40 AM வரை
விருச்சிக லக்னம் 12.41 AM முதல் 02.52 AM வரை
தனுசு லக்னம் 02.53 AM முதல் 04.59 AM வரை
மகர லக்னம் 05.00 AM முதல் 06.56 AM வரை
கும்ப லக்னம் 06.57 AM முதல் 08.38 AM வரை
மீன லக்னம் 08.39 AM முதல் 10.18 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனை மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : தனித்தன்மை வெளிப்படும்.
---------------------------------------
ரிஷபம்
வியாபாரம் சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த சங்கடங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழி உடன் பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பாசை பச்சை நிறம்
கிருத்திகை : விவேகம் வேண்டும்.
ரோகிணி : தடைகள் விலகும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மிதுனம்
புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனை மேம்படும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : சிந்தனை மேம்படும்.
திருவாதிரை : கவனம் வேண்டிய நாள்.
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வருமான வாய்ப்புகள் மேம்படும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பகை குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
மகம் : தனவரவுகள் உண்டாகும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------
கன்னி
வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வருமானத்தை உயர்த்துவதற்கான எண்ணம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : பொறுமை வேண்டும்.
அஸ்தம் : அலைச்சல் அதிகரிக்கும்.
சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். தனவரவுகளில் மந்தமான சூழல் ஏற்படும். சுபகாரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கவலை குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : அலைச்சல் உண்டாகும்.
சுவாதி : முயற்சிகள் கைகூடிவரும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
விசாகம் : நட்பு கிடைக்கும்.
அனுஷம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
கேட்டை : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
தனுசு
நண்பர்களிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : மனக்கசப்புகள் விலகும்.
பூராடம் : முடிவு கிடைக்கும்.
உத்திராடம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------
மகரம்
பொருளாதாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். இனம்புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : சிந்தனை அதிகரிக்கும்.
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த மந்தநிலை விலகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆதாயம் உண்டாகும். தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
ரேவதி : சேமிப்பு மேம்படும்.
--------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக