🔆 திதி : காலை 07.52 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.
🔆 நட்சத்திரம் : அதிகாலை 01.50 வரை உத்திராடம் பின்பு திருவோணம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.34 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 மிருகசீரிஷம், திருவாதிரை
பண்டிகை
🌷 திருநெல்வேலி, தென்காசி,சங்கரநயினார் கோவில் ஆகிய தலங்களில் லட்ச தீப காட்சி.
🌷 மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாற்றியருளல்.
வழிபாடு
🙏 முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 தை அமாவாசை
💥 திருவோண விரதம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 ஹோமம் செய்வதற்கு நல்ல நாள்.
🌟 இயந்திர பயிற்சிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள ஏற்ற நாள்.
🌟 ஆழ்துளை கிணறு பராமரிப்பு பணிகளை செய்ய நல்ல நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம்(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 10.19 AM முதல் 12.02 PM வரை
ரிஷப லக்னம் 12.03 PM முதல் 02.04 PM வரை
மிதுன லக்னம் 02.05 PM முதல் 04.15 PM வரை
கடக லக்னம் 04.16 PM முதல் 06.25 PM வரை
சிம்ம லக்னம் 06.26 PM முதல் 08.28 PM வரை
கன்னி லக்னம் 08.29 PM முதல் 10.29 PM வரை
துலாம் லக்னம் 10.30 PM முதல் 12.36 AM வரை
விருச்சிக லக்னம் 12.37 AM முதல் 02.48 AM வரை
தனுசு லக்னம் 02.49 AM முதல் 04.55 AM வரை
மகர லக்னம் 04.56 AM முதல் 06.52 AM வரை
கும்ப லக்னம் 06.53 AM முதல் 08.34 AM வரை
மீன லக்னம் 08.35 AM முதல் 10.14 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
வாக்குறுதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். சில முடிவுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : சிந்தித்துச் செயல்படவும்.
பரணி : அனுபவம் வெளிப்படும்.
கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய தொழில் சார்ந்த முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
வியாபாரம் சார்ந்த விஷயங்களில் அலைச்சல் உண்டாகும். பணி பொறுப்புகளால் உடல் அசதி ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பதால் மனதில் அமைதி உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : அலைச்சலான நாள்.
திருவாதிரை : வரவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : அமைதியான நாள்.
---------------------------------------
கடகம்
வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் பொறுப்புகள் மேம்படும். கடினமான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூசம் : பொறுப்புகள் நிறைந்த நாள்.
ஆயில்யம் : உதவி கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகள் பெற்றோர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
கன்னி
உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
அஸ்தம் : ஆர்வம் ஏற்படும்.
சித்திரை : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாயுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் சற்று கவனம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : விவாதங்கள் நீங்கும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
விருச்சிகம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : மதிப்பு மேம்படும்.
கேட்டை : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். முகத்தில் பொலிவு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூராடம் : தீர்வு கிடைக்கும்.
உத்திராடம் : பொலிவு மேம்படும்.
---------------------------------------
மகரம்
முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : தேடல் அதிகரிக்கும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
கும்பம்
நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈடுபாடு உண்டாகும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : சஞ்சலமான நாள்.
பூரட்டாதி : சோர்வுகள் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக