Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 மே, 2024

07-05-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

சித்திரை 24 - செவ்வாய்க்கிழமை

🔆 திதி : காலை 11.17 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.

🔆 நட்சத்திரம் : மாலை 03:19 வரை அஸ்வினி பின்பு பரணி.

🔆 அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 மகம், பூரம்

பண்டிகை

🌷 காரைக்குடி ஸ்ரீகொப்புடையம்மன் உற்சவம் ஆரம்பம்.

🌷 குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி வரும் காட்சி.

🌷 திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மைசூர் மண்டபத்தில் கள்ளர் திருக்கோலமாய் காட்சி.

வழிபாடு

🙏 முன்னோர்களை வழிபட நன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

💥அமாவாசை

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சாஸ்திர பயிற்சி பணிகளை செய்ய நல்ல நாள்.

🌟 பசு தொழுவ பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.

🌟 மரக்கன்றுகளை நடுவதற்கு சிறந்த நாள்.

🌟 வரப்பு தொடர்பான பணிகளை செய்ய உகந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 04.40 AM முதல் 06.28 AM வரை

ரிஷப லக்னம் 06.29 AM முதல் 08.31 AM வரை

மிதுன லக்னம் 08.32 AM முதல் 10.42 AM வரை

கடக லக்னம் 10.43 AM முதல் 12.51 PM வரை

சிம்ம லக்னம் 12.52 PM முதல் 02.52 PM வரை

கன்னி லக்னம் 02.53 PM முதல் 04.53 PM வரை 

துலாம் லக்னம் 04.54 PM முதல் 06.58 PM வரை 

விருச்சிக லக்னம் 06.59 PM முதல் 09.10 PM வரை 

தனுசு லக்னம் 09.11 PM முதல் 11.17 PM வரை 

மகர லக்னம் 11.18 PM முதல் 01.11 AM வரை 

கும்ப லக்னம் 01.12 AM முதல் 02.54 AM வரை 

மீன லக்னம் 02.55 AM முதல் 04.35 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
        இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தெளிவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : விமர்சனங்கள் மறையும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
ரிஷபம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின் போது கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அசதிகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
மிதுனம்

கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவுகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் மன சஞ்சலம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக வியாபாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பிரீதி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : சஞ்சலமான நாள்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
கடகம்

அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக பணிகளில் நாட்டம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்

புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். 
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்

குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் விலகும். தடைபட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகளின் மத்தியில் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்

மகம் : குழப்பம் விலகும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
கன்னி

வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தனம் தொடர்பான விஷயங்களில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆர்வமின்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும். 
அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். 
---------------------------------------
துலாம்

உடன்பிறந்தவர்களின் வழியில் நன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் மதிப்பு மேம்படும். பிற மத மக்களின் உதவி கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்

சித்திரை : நன்மை உண்டாகும். 
சுவாதி : உதவி கிடைக்கும். 
விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்

வருவாயில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும். உறவினர்களிடத்தில் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியான சில சரக்குகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
அனுஷம் : ஆதாயம் அடைவீர்கள். 
கேட்டை : முடிவு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு

சில அனுபவங்களால் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். ஆக்கபூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செயல்படவும். 
---------------------------------------
மகரம்

பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வியாபார விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : மாற்றம் ஏற்படும். 
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : தடைகள் விலகும்.
---------------------------------------
கும்பம்

அதிரடியான சில வியூகங்கள் மூலம் மேன்மை உண்டாகும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : மேன்மை உண்டாகும். 
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும். 
---------------------------------------
மீனம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். சில பணிகளை சூழ்நிலை அறிந்து மேற்கொள்ளவும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : கலகலப்பான நாள்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும். 
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக