Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 மே, 2024

06-05-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

சித்திரை 23 - திங்கட்கிழமை

🔆 திதி : பிற்பகல் 01.25 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி.

🔆 நட்சத்திரம் : மாலை 04:39 வரை ரேவதி பின்பு அஸ்வினி.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.54 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம்

💥 ஆயில்யம், மகம்

பண்டிகை

🌷 ஸ்ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம்.

🌷 தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் வாகனத்தில் புறப்பாடு.

🌷 கீழ் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் கெருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

🌷 திருத்தனி ஸ்ரீமுருகனுக்கு பால் அபிஷேகம்.
 
வழிபாடு

🙏 சிவபெருமானை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

💥சிவராத்திரி

💥சுபமுகூர்த்த தினம்

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கு நல்ல நாள்.

🌟 கலை பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.

🌟 பிரார்த்தனைகளை நிறைவேற்ற நல்ல நாள்.

🌟 பொதுச் சபை கூட்டுவதற்கு ஏற்ற நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 04.44 AM முதல் 06.32 AM வரை

ரிஷப லக்னம் 06.33 AM முதல் 08.35 AM வரை

மிதுன லக்னம் 08.36 AM முதல் 10.46 AM வரை 

கடக லக்னம் 10.47 AM முதல் 12.55 PM வரை 

சிம்ம லக்னம் 12.56 PM முதல் 02.56 PM வரை 

கன்னி லக்னம் 02.57 PM முதல் 04.57 PM வரை 


துலாம் லக்னம் 04.58 PM முதல் 07.02 PM வரை 

விருச்சிக லக்னம் 07.03 PM முதல் 09.13 PM வரை 

தனுசு லக்னம் 09.14 PM முதல் 11.21 PM வரை 

மகர லக்னம் 11.22 PM முதல் 01.15 AM வரை

கும்ப லக்னம் 01.16 AM முதல் 02.58 AM வரை

மீன லக்னம் 02.59 AM முதல் 04.39 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
         இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்களால் சோர்வு உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் இழுபறி உண்டாகும். சுபம் நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : அலைச்சல் ஏற்படும்.
பரணி : சிந்தித்து முடிவெடுக்கவும்.
கிருத்திகை : மத்தியமான நாள்.
---------------------------------------
ரிஷபம்

பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம் 

கிருத்திகை : ஆதாயகரமான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : மதிப்பு உயரும்.
---------------------------------------
மிதுனம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். வீடு, வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சமூக பணிகளில் உயர் பொறுப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகளுக்கு உண்டான வெற்றி கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 

மிருகசீரிஷம் : சந்திப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : பொறுப்புகள் கிடைக்கும். 
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
கடகம்

கணவன், மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். தவறிய சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் திருப்பம் ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 

புனர்பூசம் : வேறுபாடுகள் விலகும். 
பூசம் : உதவிகள் சாதகமாகும்.
ஆயில்யம் : திருப்பம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்

திட்டமிட்ட பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் கோபமின்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபார அலைச்சல்களால் ஒருவிதமான பதட்டம் ஏற்படும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். சஞ்சலம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : தாமதம் உண்டாகும்.
பூரம் : பதட்டமான நாள்.
உத்திரம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கன்னி

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அமையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வெற்றி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : நம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
துலாம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் அலைச்சல் உண்டாகும். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அதிரடியான செயல்களின் மூலம் மாற்றம் ஏற்படும். பணி சார்ந்த முயற்சிகள் கைகூடும். மனதளவில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்படுவது குறையும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 

சித்திரை : உதவிகள் கிடைக்கும். 
சுவாதி : அனுகூலம் ஏற்படும்.
விசாகம் : மாற்றம் பிறக்கும். 
---------------------------------------
விருச்சிகம்

குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களின் சுயரூபம் வெளிப்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை தரும். உத்தியோகத்தில் இருந்துவந்த பதற்றமான சூழல் மறையும். புதிய கனவுகள் பிறக்கும். உயர்வு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் 

விசாகம் : சிக்கனமாக செயல்படவும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : கனவுகள் பிறக்கும்.
---------------------------------------
தனுசு

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம் 

மூலம் : ஆசைகள் நிறைவேறும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : மதிப்பு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்

சூழ்நிலை அறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை விலகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அலுவல பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 

உத்திராடம் : முடிவுகள் பிறக்கும்.
திருவோணம் : மந்த நிலை விலகும். 
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
கும்பம்

உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையால் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். வியாபார பணிகளில் மத்தியமான லாபம் கிடைக்கும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூரட்டாதி : வேறுபாடுகள் விலகும்.
---------------------------------------
மீனம்

நபர்களின் தன்மை அறிந்து பழகவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார ரகசியங்களில் கவனம் வேண்டும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படவும். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் இருக்கவும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
ரேவதி : பொறுமையுடன் இருக்கவும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக