Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 11 ஜூலை, 2024

11-07-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

ஆனி 27 - வியாழக்கிழமை

🔆 திதி : காலை 10.19 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.

🔆 நட்சத்திரம் : பிற்பகல் 01.46 வரை பூரம் பின்பு உத்திரம்.

🔆 அமிர்தாதி யோகம் : அதிகாலை 05.58 வரை அமிர்தயோகம் பின்பு பிற்பகல் 01.46 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 இன்று பிற்பகல் 01.46 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

பண்டிகை

🌷 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் விழா தொடக்கம், தங்க சப்பரத்தில் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 நவகிரக சாந்தி செய்ய சிறந்த நாள்.

🌟 நோயாளிகள் மருந்து உண்ண ஏற்ற நாள்.

🌟 சித்திரம் வரைய உகந்த நாள்.

🌟 வழக்குகளை வாதிட நல்ல நாள்.
_______________________________
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
_______________________________
மேஷ லக்னம் 12.25 AM முதல் 02.09 AM வரை 

ரிஷப லக்னம் 02.10 AM முதல் 04.12 AM வரை 

மிதுன லக்னம் 04.13 AM முதல் 06.27 AM வரை 

கடக லக்னம் 06.28 AM முதல் 08.35 AM வரை 

சிம்ம லக்னம் 08.36 AM முதல் 10.37 AM வரை 

கன்னி லக்னம் 10.38 AM முதல் 12.37 PM வரை 

துலாம் லக்னம் 12.38 PM முதல் 02.43 PM வரை 

விருச்சிக லக்னம் 02.44 PM முதல் 04.54 PM வரை 

தனுசு லக்னம் 04.55 PM முதல் 07.02 PM வரை 

மகர லக்னம் 07.03 PM முதல் 08.56 PM வரை 

கும்ப லக்னம் 08.57 PM முதல் 10.39 PM வரை 

மீன லக்னம் 10.40 PM முதல் 12.20 AM வரை
_______________________________
இன்றைய ராசி பலன்கள்
_______________________________
மேஷம்

மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பொதுநல செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
பரணி : ஈடுபாடு மேம்படும்.
கிருத்திகை : ஆதாயகரமான நாள்.
---------------------------------------
ரிஷபம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான பயணங்கள் கைகூடும். மேற்கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 

கிருத்திகை : குழப்பங்கள் நீங்கும். 
ரோகிணி : பயணங்கள் கைகூடும். 
மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். சக பணியாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கல்வி கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். தாயிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
புனர்பூசம் : ஆர்வம் மேம்படும்.
---------------------------------------
கடகம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
பூசம் : ஆர்வம் பிறக்கும்.
ஆயில்யம் : நன்மையான நாள்.
---------------------------------------
சிம்மம்

வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : மதிப்புகள் மேம்படும்.
பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
கன்னி

தோற்றப் பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சாம்பல் நிறம்

உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : மாற்றங்கள் பிறக்கும்.
சித்திரை : குழப்பமான நாள்.
---------------------------------------
துலாம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பம் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும். 
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 
விசாகம் : பொறுமை வேண்டும். 
---------------------------------------
விருச்சிகம்

வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : மேன்மை ஏற்படும். 
அனுஷம் : இன்னல்கள் நீங்கும்.
கேட்டை : புரிதல்கள் ஏற்படும்.
---------------------------------------
தனுசு

எண்ணிய பணிகளை அலைச்சல்களுக்குப் பின்பு செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிறுதூர பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். மனை மற்றும் வாகன விருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 
பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மகரம்

வர்த்தக பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய தேடல் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
திருவோணம் : தேடல்கள் அதிகரிக்கும். 
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் உண்டாகும். பங்குதாரர்களால் சில விரயம் ஏற்படக்கூடும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும். 
பூரட்டாதி : விரயம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்

சுப காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். பக்குவமான பேச்சுக்கள் காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புரிதல் உண்டாகும். போட்டி செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வர்த்தக முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். சகோதரிகள் வழியே ஆதாயம் உண்டு. லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும். 
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக