ஆனி 32 - செவ்வாய்க்கிழமை
🔆 திதி : மாலை 06.38 வரை தசமி பின்பு ஏகாதசி.
🔆 நட்சத்திரம் : முழுவதும் விசாகம்.
🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் மரணயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 இன்று முழுவதும் ரேவதி
பண்டிகை
🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வாகனத்தில் புறப்பாடு.
🌷 வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜப் பெருமாள் கெருட வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
🙏 முருக வழிபாடு எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 குளத்தை சீர்படுத்த ஏற்ற நாள்.
🌟 தேவாராதனை செய்வதற்கு உகந்த நாள்.
🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.
🌟 ஆபரண பணிகளை மேற்கொள்வதற்கு சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 12.05 AM முதல் 01.49 AM வரை
ரிஷப லக்னம் 01.50 AM முதல் 03.52 AM வரை
மிதுன லக்னம் 03.53 AM முதல் 06.07 AM வரை
கடக லக்னம் 06.08 AM முதல் 08.16 AM வரை
சிம்ம லக்னம் 08.17 AM முதல் 10.17 AM வரை
கன்னி லக்னம் 10.18 AM முதல் 12.18 PM வரை
துலாம் லக்னம் 12.19 PM முதல் 02.23 PM வரை
விருச்சிக லக்னம் 02.24 PM முதல் 04.35 PM வரை
தனுசு லக்னம் 04.36 PM முதல் 06.42 PM வரை
மகர லக்னம் 06.43 PM முதல் 08.36 PM வரை
கும்ப லக்னம் 08.37 PM முதல் 10.19 PM வரை
மீன லக்னம் 10.20 PM முதல் 12.00 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் திடீர் வரவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான சிந்தனைகள் மனதில் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கைகூடும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் துரிதம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் ஏற்படும்.
ரோகிணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மிதுனம்
எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். கல்வி பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : மனப்பக்குவம் பிறக்கும்.
திருவாதிரை : இழுபறிகள் மறையும்.
புனர்பூசம் : சுறுசுறுப்பான நாள்.
---------------------------------------
கடகம்
நினைத்த சில காரியங்கள் தாமதமாகி முடிவு பெறும். பழைய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாயுடன் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : முயற்சிகள் கைகூடும்.
ஆயில்யம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். விருந்தினரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : அனுகூலம் ஏற்படும்.
பூரம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
உத்திரம் : தைரியம் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
கணிதம் தொடர்பான துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை சிலருக்கு சாதகமாக அமையும். பாடங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திரம் : லாபகரமான நாள்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : தெளிவுகள் பிறக்கும்.
---------------------------------------
துலாம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். பணிகளில் ஒருவிதமான மந்தமான சூழ்நிலை ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : குழப்பங்கள் ஏற்படும்.
சுவாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் : மந்தமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பயணங்களால் விரயங்கள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகளில் போராட்டம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
விசாகம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : போராட்டங்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உறவுகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
---------------------------------------
மகரம்
அரசு செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வருவாய் நெருக்கடியால் மன அமைதியற்ற நிலை ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. இலக்குகளை முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். குறுகிய பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : அலைச்சல் ஏற்படும்.
அவிட்டம் : திட்டமிட்டுச் செயல்படவும்.
---------------------------------------
கும்பம்
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். விளையாட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : புரிதல் உண்டாகும்.
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
காப்பீட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மறைமுக எதிர்ப்புகளால் விரயங்கள் உண்டாகும். பயனற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். இன்சொல் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : குழப்பமான நாள்.
ரேவதி : கவனம் வேண்டும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக