Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

02-02-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, தை 20 
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை


திதி

சுக்ல பக்ஷ சதுர்த்தி - Feb 01 11:38 AM – Feb 02 09:14 AM

சுக்ல பக்ஷ பஞ்சமி - Feb 02 09:14 AM – Feb 03 06:53 AM

நட்சத்திரம்

உத்திரட்டாதி - Feb 02 02:33 AM – Feb 03 12:52 AM

ரேவதி - Feb 03 12:52 AM – Feb 03 11:16 PM

கரணம்

பத்திரை - Feb 01 10:26 PM – Feb 02 09:14 AM

பவம் - Feb 02 09:14 AM – Feb 02 08:03 PM

பாலவம் - Feb 02 08:03 PM – Feb 03 06:53 AM

யோகம்

சிவம் - Feb 01 12:24 PM – Feb 02 09:14 AM

ஸித்தம் - Feb 02 09:14 AM – Feb 03 06:05 AM

ஸாத்தியம் - Feb 03 06:05 AM – Feb 04 03:02 AM

வாரம்

ஞாயிற்றுக்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:43 AM
சூரியஸ்தமம் - 6:23 PM

சந்திரௌதயம் - Feb 02 9:35 AM
சந்திராஸ்தமனம் - Feb 02 10:01 PM

அசுபமான காலம்

இராகு - 4:55 PM – 6:23 PM
எமகண்டம் - 12:33 PM – 2:00 PM
குளிகை - 3:28 PM – 4:55 PM

துரமுஹுர்த்தம் - 04:50 PM – 05:36 PM

தியாஜ்யம் - 11:29 AM – 12:58 PM

சுபமான காலம்

அபிஜித் காலம் - 12:10 PM – 12:56 PM

அமிர்த காலம் - 08:23 PM – 09:52 PM

பிரம்மா முகூர்த்தம் - 05:07 AM – 05:55 AM

ஆனந்ததி யோகம்

திரம் Upto - 12:52 AM
வர்தமானம்

வாரசூலை

சூலம் - West
பரிகாரம் - வெல்லம்

சூர்யா ராசி

சூரியன் மகரம் ராசியில்

சந்திர ராசி

மீனம் (முழு தினம்)

________________________________
ஞாயிறு ஹோரை

காலை

06:00 - 07:00 - சூரி - அசுபம்
07:00 - 08:00 - சுக் - சுபம்
08:00 - 09:00 - புத - சுபம்
09:00 - 10:00 - சந் - சுபம்
10:00 - 11:00 - சனி - அசுபம்
11:00 - 12:00 - குரு - சுபம்

பிற்பகல்

12:00 - 01:00 - செவ் - அசுபம்
01:00 - 02:00 - சூரி - அசுபம்
02:00 - 03:00 - சுக் - சுபம்
        
மாலை 

03:00 - 04:00 - புத - சுபம்
04:00 - 05:00 - சந் - சுபம்
05:00 - 06:00 - சனி - அசுபம்
06:00 - 07:00 - குரு - சுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

________________________________
இன்றைய ‌ராசி பலன்கள்
_______________________________
மேஷம் (Aries)

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : எதிர்ப்புகள் நீங்கும்.
கிருத்திகை : அலைச்சல் உண்டாகும்.
---------------------------------------
♉ ரிஷபம் (Taurus)

அலுவலகப் பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தன வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மறதி விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 

கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும். 
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிஷம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
♊ மிதுனம் (Gemini)

வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். மூலிகை வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். பயண விஷயங்களில் நிதானம் வேண்டும். விவசாய பணிகளில் இருப்பவர்களுக்கு பாசனம் தொடர்பான வசதிகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : வசதிகள் மேம்படும்.
---------------------------------------
♋ கடகம் (Cancer)

மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
♌ சிம்மம் (Leo)

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களிடத்தில் வாதங்களைத் தவிர்க்கவும். உயர்கல்வியில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மகம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
உத்திரம் : நெருக்கடியான நாள்.
---------------------------------------
கன்னி (Virgo) 

உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரங்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
துலாம் (Libra)

கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். பழைய சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : அனுசரித்துச் செல்லவும். 
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
♏ விருச்சிகம் (Scorpio)

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படத் துவங்குவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஆதரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : ஆதாயகரமான நாள்.
அனுஷம் : அலைச்சல் ஏற்படும். 
கேட்டை : கனவுகள் பிறக்கும். 
---------------------------------------
♐ தனுசு (Sagittarius)

விவசாய பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். தொழில் நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான சிந்தனைகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பெருமை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மூலம் : லாபகரமான நாள்.
பூராடம் : பயணங்கள் கைகூடும்.
உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.
---------------------------------------
மகரம் (Capricorn)

சுபகாரிய முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சுபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். 
திருவோணம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
கும்பம் (Aquarius)

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வங்கி தொடர்பான பணிகள் நிறைவு பெறும். ஆபரண விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். செலவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : வரவுகள் கிடைக்கும்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : ஆர்வம் மேம்படும்.
---------------------------------------
மீனம் (Pisces) 

பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல்கள் உண்டாகும். புதியவர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செய்யும் முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பும் பணியும் அதிகரிக்கும். எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. போட்டி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!