Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 18 நவம்பர், 2019

மசாலா உணவுகளில் சேர்க்கும் கிராம்பின் ஆச்சரிய உண்மைகள்!

 Image result for கிராம்பு 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

நீங்கள் கிராம்பை எடுத்து கொண்டால் அது அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன்கள் மட்டும் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த சின்ன மசாலா பொருள் சமையலில் அற்புதமான சுவையை அள்ளித் தருகிறது. இந்த கிராம்பு பூக்களுடைய மொட்டுகளை காய வைத்து தயாரிக்கப்படுகிறது. பழைய கால வரலாற்று படி பார்த்தால் சைரன் காலமான 1700 பி. சி வருடங்களுக்கு முன்பு இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இந்த கட்டுரையில் இன்னைக்கு கிராம்பின் அற்புத நன்மைகளை பற்றி காணலாம்.

கிராம்பு உலர்ந்த பூக்களின் மொட்டுகள் :

கிராம்பு மொட்டுகள் அதன் பூக்கள் பூக்கும் முன்னாடியே பறித்து தயாரிக்கும் பொருளாகும். அதை பறிக்கும் போது பச்சையாக தான் இருக்கும் ஆனால் பிறகு நன்றாக காய வைக்கும் போது ப்ரவுன் கலரில் மாறி விடுகின்றன.

 

பழமையான 400 வருட கிராம்பு மரம் :

கிராம்பு மரம் தோன்றியது தீவுகளில் தான். மேற்கத்திய இந்தோனியா என்றழைக்கப்படும் மெலக்காஸ் என்ற தீவில் தோன்றியது. இந்த தீவுகளில் தான் கிராம்பு மரம் வளர்ந்தது. எனவே தான் இது மசாலா பொருட்களின் தீவாகவும் உள்ளது. ஏனெனில் கிராம்பு மரம் ஒரு சில தீவுகளில் மட்டுமே காணப்படும்.
அஃவோ என்ற 400 வருடம் பழமையான கிராம்பு மரம் மெலக்காஸ் இடத்தில் உள்ள டெர்னேட் என்ற தீவில் காணப்படுகிறது.

 

கிராம்பில் யூஜினால் என்ற அரோமேட்டிக் பொருள் 

உள்ளது.

யூஜினால் என்ற கூட்டுப் பொருள் வலிகளை போக்கும் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. இதனுடைய கிராம்பு எண்ணெய் 80% யூஜினாலால் மருத்துவ பயன்களுக்கு பயன்படுகிறது.

 

பூச்சி விரட்டி :

கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது.
எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்பு களை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும்.

 

சீரண சக்தியை அதிகரிக்கிறது

கிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது.

 

காலராவுக்கு எதிராக செயல்படுதல்

காலரா தண்ணீரால் பரவக் கூடிய நோயாகும். இதனால் பேதி, வாந்தி மற்றும் இறப்பு கூட ஏற்படலாம். கிராம்பு நிறைய நோயை உண்டாக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. அதிலும் காலரா பாக்டீரியாவிற்கு எதிராக செயல்பட்டு அதன் விளைவை குறைக்கிறது.

புற்று நோய்க்கு எதிராக செயல்படுதல்

கிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல்புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லீரலை பாதுகாக்கிறது

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.

டயாபெட்டீஸ்யை கட்டுப்படுத்துகிறது

உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

வெள்ளை அணுக்களை அதிகரித்தல்

இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் எதிர்ப்பு போராளிகள் ஆவர். உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும். இது நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது.
எனவே கிராம்பை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அழற்சி கிருமிகளிலிருந்து நம்மை காக்கிறது.

 

வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்தல்

பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவராக விளங்குகிறது. இதில் உள்ள யூஜினால் வலி நிவாரணி மற்றும் ஆண்டி அழற்சி பொருட்கள் இதற்கு துணை புரிகின்றன. மேலும் இதிலுள்ள இன்னும் நிறைய பொருட்கள் பற்களுக்கு ஒரு சிமெண்ட் மாதிரி காக்கிறது.

தலைவலியை குறைக்கிறது

அடுத்த தடவை உங்களுக்கு தீவிர தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும் உடனடியாக உங்கள் தலைவலி பறந்தே போகும்.
என்னங்க இன்னைக்கு கிராம்பின் அற்புத நன்மைகளை அறிந்து கொண்டோம். இதை பயன்படுத்தி பலன் பெறுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக