நான் சொல்ல வந்தது வேலை செய்யுற இடத்திலிருந்து எப்படி வீட்டிற்கு சீக்கிரமாய் ஓடி போவதைப் பற்றி! பொதுவா வேலை இல்லை என்றால் நான்கு மணிக்கே சென்றுவிடலாம்! அது வரைக்கும் என்னால் கால் ஆட்டிக் கொண்டு இருக்க முடியாது. ஆக, முடிவு எடுத்தேன் ஒரு இரண்டுக்கே எப்படியாச்சு ஓடி போவது என்று!
பாஸ் கேட் அருகில் நின்று கொண்டிருந்தார். நானும் அவரை கடந்து சென்றேன். அவர் புன்னகையித்தார். நானும் பதில் புன்னகை வீசினேன். ஆனால், அவர் ஒன்றும் சொல்லவில்லை!
எப்படி?????
ஏன்????
கையில் ஒரு பையும் இல்லாமல் சென்றால் எப்படி சந்தேகம் வரும்? :))))))))
ஆமாங்க, தேவையானவற்றை ஆபிஸில் வைத்து விடுவதே என் பழக்கம் . நான் எடுத்து சென்றது- பஸ் பாஸ் , பர்ஸ் ,செல்போன் ஹெட்போன்...
கைவீசு யம்மா கைவீசு என்று சந்தோஷமாக பாஸ்-ஸை கடந்து செல்லும்போது வந்த மகிழ்ச்சி இருக்குதே!!!!
உலக கோப்பையை ஒரே வருடத்தில் ரெண்டு தடவ தூக்கின மாதிரி ஒரு சந்தோஷம்.
ஆனா, கேபின் பக்கம் வந்து பாத்தாங்கன்னா, மாட்டிக்க மாட்டீயா?னு நீங்க கேக்குறது புரியுது
அதுக்கும் கைவசம் வித்தை இருக்கே. அப்படியே வேலை செய்து கொண்டிருக்கும் தோரணையில் சில கோப்புகளை மேசையில் பரப்பி வைத்துவிட்டேன். ஒரு சைட்ல பேனா ஒரு குவளையில் தண்ணீர் இருக்கும்.படி செய்து விட்டேன் நம்ம எல்லாம் யாரு?
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக