Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 30 ஜனவரி, 2019

சித்தர்கள் என்பவர்கள் யார் ? தொடர் 1



சித்தர்கள் என்பவர்கள்  யார் 
          சித்தர் என்பது வடமொழியில் சித்தா என்றும் தமிழ் மொழியில் சித்தர் என்றும் 
கூறப்படுகிறது .சித்தர்கள் என்பவர்கள் சித்தாலோகம் என்னும் இடத்திலே 
பிறக்கிறார்கள் என்று இந்து மதத்தின் மிக தொன்மைவாய்ந்த நூல்கள் மூலம் 
நாம் அறியலாம்

         சித்தர்கள் என்பவர்களை ஞானிகள், யோகிகள்என்றும் அழைக்கப்பெறுவர்.
முக்கியமாக பல சித்திகளை அதாவது அசாதாரணமான சக்திகளை பெற்றிருக்கிறார்கள் 
.சித்தர்கள் எல்லாம் அறிந்தவர்கள் ,அனைத்தையும் துறந்தவர்கள் ,பஞ்சபூதத்தையும் 
அடுக்கும் முறையையும் அறிந்தவர்கள் ,நாம் இன்று கற்கும் அனைத்தையும் 
அவர்கள் அன்றைக்கே அறிந்து நாம் எட்ட முடியாத இடத்தில அறிவிலும் 
பண்பிலும் சிறந்தவர்கள்

சித்தர்களின் கொள்கை
            சித்தர்களின் வாழ்வின் நோக்கமானது தனக்கு கிடைத்த உடலை முழுமையாக 
பயன்படுத்துவது எவ்வாறு என்பதை அறிந்து அதை பூர்த்திசெய்து வைத்திருந்தார்கள் .
அவ்வாறு அவர்கள் தங்களுக்கு கிடைத்த பிறப்பில் மனிதர்களுக்கு அளித்த விஷயங்கள்
எண்ணிலடங்காதவை.தன்னுள் இருக்கும் இறைவனை உணர்வதே அவர்களின் 
கொள்கை 
    அவர்களின் படைப்புகள்    
            தற்காப்புக்கலை ,மருத்துவர்களை ,இறந்த உடலை பாதுகாப்பது ,
மூலிகைகளை கண்டறிவது ,ஆகாயத்தில்  பறப்பது,உடலை விட்டு வேறு உடலில் 
வாழ்வது , இறைவனை அடையும் பல யுக்திகளையும் அவர்கள் எழுதி வைத்தால்
சென்றுள்ளார்கல் இவர்களால் அருளபெற்ற சித்த  மருத்துவம் ,வர்மம்யோகம் ,
ரசாயனங்களை கையாளும் முறை போன்ற கலைகள் இன்னும் தமிழகத்தில் 
பின்பற்ற படுகிறது .
            
                தமிழ் கலாச்சாரத்தின் வழி 18 சித்தர்கள் இருந்தாலும் ,
மேலும் எண்ணில் அடங்காத சில சித்தர்கள் இருந்ததற்கான தொன்மையான 
நூல்கள் சாட்சிகளும் உள்ளன .

              சித்திகள் என்பது சாதாரணமானவை அல்ல வைணவ சமயத்தார்களால் 
கூறப்பட்ட தமிழ் சித்தர்கள் பெற்றிருப்பதாக கூறப்படும் எட்டு சித்திகளும்  
சித்தர்களும் மேலும் காண்போம்


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக