Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 31 ஜனவரி, 2019

மெல்லோட்டம்

jogging


மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள். விரைவாக நடப்பதற்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும். இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது. மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துக்கொள்ள  வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டம் மேற்கொள்ளும் முறை: விதிமுறைகள் என்று சிறப்பாக எதுவும் இல்லை. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து உங்கள் இதயத்துடிப்பு, இரத்த அழுத்த அளவு, நாடித் துடிப்பு, உடல் எடை ஆகியவற்றை நன்கு பரிசோதனை செய்து உங்கள் உடலின் தகுதியைக் கணித்துக்கொள்ளுங்கள். அவற்றைப் பொறுத்து மெல்லோட்டத்தில் ஈடுபடலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.

நம் நாட்டுச் சூழலில் காலையில் 8 மணிக்கு முன்னரும், மாலையில் 5 மணிக்குப் பின்னரும் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். அவைதான் இந்த உடற்பயிற்சிக்கான சிறந்த வேளைகள். மாலைப் பொழுதைவிட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்தது. ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இளம் தென்றலும், மாசு படியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உடல் நலத்துக்கு நல்லது. மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலால்  உங்கள் மெல்லோட்டம் பாதிக்கப்படும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்து குடிக்கலாம். இதனால் மெல்லோட்டத்தின்போது உடலில் இருந்து வெளியாகும் பலவகையான உப்புகளின் இழப்பையும், நீரின் இழப்பையும் ஈடுசெய்யலாம்.

joggy



நன்மைகள்:
  • மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.
  • நுரையீரலுக்குப்  போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.
  • இதயமானது சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்குச் செல்லும் இரத்தத்தின் அளவானது சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
  • இதய இரத்தக் குழாய்களையும், இரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் வலுவாக்குகிறது.
  • இரத்தக் குழாய்களின் உள்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
  • இரத்தமிகு அழுத்த நிலையைக் குறைக்கத் துணைபுரிகிறது.
  • இதயத் தமனிகளில் ஓடும் இரத்தத்தின் அளவானது அதிகமாவதால், இதயத் தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கிறது.
  • இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், டிரை கிளிசரைடையும் குறைக்க உதவுவதால், மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக