இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மத்திய பிரதேசத்தில் உள்ள 74 வயதான ஒருவரின்
மண்டையில் கொம்பு போன்ற வடிவம் ஒன்று வளர்ந்துள்ளது. இதை மருத்துவர்கள் 'டெவில்ஸ்
ஹார்ன்' (Devils Horn) என்று குறிப்பிட்டுள்ளனர். இவரின் நிலையை கண்ட
மருத்துவர்களே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இப்படி ஒரு அரிய நோயினால்
பாதிக்கப்பட்ட இவருக்கு, மருத்துவர்கள் என்ன தீர்வை வழங்கியுள்ளனர் என்று
தெரியுமா?
தலையில் கொம்புடான் வாழும் ஷாம்
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில்
ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், என்ற 74 வயதுடைய நபரின் தலையில்
ஒரு வகை அறிய நோயினால் பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் கொம்பு போன்ற வடிவம்
உருவாகியுள்ளது. இந்த கொம்புகள் தற்பொழுது அவரின் தலைக்கு வெளியில் மட்டும்
வளராமல், தலைக்கு உள் பகுதியிலும் வளரத் துவங்கியுள்ளது.
சிறிய காயத்தினால் உருவான கொம்பு
பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட
காயத்திற்குப் பிறகு, இப்படி அவரின் தலையில் கொம்பு போன்ற வடிவம் உருவாகியுள்ளது
என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். முதலில் சிறிய காயமாக இருந்துள்ளது,
காயம் ஆறியதும், அடிபட்ட இடத்தில் சிறிதாக மேடு போன்று ஷாமின் சதை வளர்ந்துள்ளது.
சூரிய
ஒளிபட்டால் வளரும் கொம்பு
பிறகு நாளடைவில் அவரது தலையிலிருந்த மேடு,
கடினமான கொம்பாக மாறத் துவங்கியுள்ளது. தற்பொழுது அவர் தலையில் சுமார் 5' இன்ச்
நீளத்திற்கு இந்த கொம்பு போன்ற வடிவம் வளர்ந்துள்ளது, சூரிய ஒளிபட்டால் இந்த
கொம்புகள் தலைக்குள் வேர் பிடித்து வேகமாக வளரும் என்று அவருக்குத் தெரியவில்லை.
இது
என்ன வகை நோய் என்று தெரியுமா?
மருத்துவர்கள் அவரை பலகட்ட பரிசோதனைக்கு
உட்படுத்தி, அவருக்கு வந்துள்ள இந்த அரிய வகை நோய் சிபெசியஸ் ஹார்ன் (Sebaceous
Horn) என்று கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் தலையில் வளந்துள்ள
கொம்பைப் பல முறை ஷாம் தானாகவே வெட்டி நீக்கி வந்துள்ளார் என்றும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
நவீன முறைகளைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை
மருத்துவர்கள் நடத்திய சோதனையில் கொம்பின்
வேர்கள், ஷாமின் தலையில் ஆழமாகப் படரவில்லை என்பதனால், உடனே நவீன முறைகளைப்
பயன்படுத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து, அவர் தலையிலிருந்த 5' இன்ச்
அளவு கொண்ட கொம்பை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
வைரல் செய்தி
தலையில் கொம்பு முளைத்த இந்த மனிதனின் கதை
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் ஷாம்
நலமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக