இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாட்டின்
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, தனது ஏடிஎம் கட்டணம், குறைந்தபட்ச
இருப்பு தொகை, டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட கட்டணங்களை
மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு
வர உள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது.
அதிலும் இவ்வங்கியின் இணைய சேவைகளான மொபைல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு இவ்வங்கி
மாதாந்திர வரம்புகளை முற்றிலுமாக நீக்கியுள்ளது.
இதன் மூலம்
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இனி வரம்பற்ற சேவையை பெற முடியும் என்றும், முந்தைய
மாதத்தில் 25,000 இருப்பு தொகை வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்சம் 40
பரிமாற்றங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.
இருப்பு தொகை இல்லாவிட்டால் கட்டணம்
குறிப்பாக
மாதத் சராசரியான இருப்பு தொகை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக
குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3,000 இருப்பு தொகையில் 50 சதவிகிதம் பராமரிக்காதவர்களுக்கு,
10 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியும், இதே 75 சதவிகிதம் இருப்பு தொகையை
பராமரிக்காதவர்களுக்கு 15 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து
வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மாத இருப்பு தொகையானது மிக மிகக்
குறையும் போது 30 - 50 ரூபாயாக அபராதம் விதிக்கப்படும் என்றும், இதோடு ஜி.எஸ்.டி
வரிவிகிதமும் சேரும் என்றும் கூறப்படுகிறது.
ஆன்லைன் சேவைகளுக்கு சலுகை
இதே செமி
அர்பன் கிளைகளில், 2000 ரூபாயும், கிராமப்புறங்களில் 1000 ரூபாயும் இருப்பு
தொகையாக இருக்க வேண்டும் என்றும் இந்த வங்கி தெரிவித்துள்ளது. ஆன்லைன் தேசிய
மின்னணு பண பரிமாற்றம் எனப்படும் நெஃப்ட் பரிமாற்றத்திற்கும் மற்றும் ரியல் டைம்
கிராஸ் செட்டில்மெண்ட் எனப்படும் ஆர்.டி.ஜி.எஸ் சேவை இலவசம் என்றாலும், வங்கிகளில்
மேற்கொள்ளும் பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள் உண்டு என்றும் கூறப்படுகிறது.
டெபாசிட் தொகைக்கும் கட்டணம்
சேமிப்பு கணக்குகளில்
செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு, முதல் மூன்று பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள்
எதுவும் இல்லை என்றும், அதன் பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 50
ரூபாய் கட்டணத்துடன் ஜி.எஸ்.டியும் வசூலிக்கப்படும். அதே கணக்கு வைத்திருக்கும்
வங்கி கிளையை தவிர, மற்ற கிளைகளில் செய்யப்படும் டெபாசிட் செய்யப்படுவதற்கான
அதிகபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாய் என்றும், இதற்கு மேல் டெபாசிட் செய்ய வேண்டும்
எனில் வங்கி மேலாளர் தான் இதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கிகளில் இருந்து பணம் எடுக்க கட்டணம்
இதே தங்களது
சேமிப்பு கணக்கில் 25,000 ரூபாயை இருப்பு தொகையாக வைத்துள்ளவர்கள் இரண்டு முறை
கட்டமில்லாமல், பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும், இதே 25,000 - 50,000 வரை
இருப்பு வைத்துள்ளவர்கள் 10 முறை கட்டணமில்லாமல் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்
என்றும், இதே 50,000 - 1,00,000 லட்சம் வரை இருப்பு தொகையாக வைத்துள்ளவர்கள் 15
முறை கட்டமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
இதில் இலவச வரம்பை தாண்டிய ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 50 ரூபாய் கட்டணமும்,
ஜி.எஸ்.டி கட்டணமும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏடிஎம் கட்டணங்கள் இவ்வளவு தான்
சேமிப்பு
கணக்கில் 25,000 ரூபாய் இருப்பு தொகையாக வைத்திருப்பவர்கள் மாதத்தில் 5 பரிவர்த்தனைகளை
இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும், இது வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி
நிறுவனங்களிலும் இந்த நிதி பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம் என்றும் எஸ்.பி.ஐ
அறிவித்துள்ளது. அதிலும் மெட்ரோ அல்லாத நகரங்களில் இருப்பவர்களுக்கு, மபிற
வங்கிகளில் 5 இலவச பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம் என்றும் இவ்வங்கி
அறிவித்துள்ளது.
மெட்ரோ நகரங்களில் சலுகை குறைவு
இதே மும்பை,
டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களுரு ஆகிய இடங்களில் உள்ள
வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.பி.ஐ அல்லாத வங்கிகளில் 3 பரிவர்த்தனைகள் மட்டுமே
கட்டணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய பரிவர்த்தனைகளில் எஸ்.பி.ஐயில்
செய்யப்படும், அதிகப்பட்ச பரிவர்த்தனைக்காக 10 ரூபாய் கட்டணம் மற்றும்
ஜி.எஸ்.டியும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், இதே மற்ற வங்கிகளில் இதில்
இருமடங்காகவும், கூடுதலாக ஜி.எஸ்.டியும் இதனுடன் செலுத்த வேண்டி இருக்கும் என்றும்
கருதப்படுகிறது.
இதையும் கொஞ்சம் கவனிங்க, இனி இதற்கும் கட்டணம்
மேலும் நிதி
அல்லாத பரிவர்த்தனைக்காக 5 - 8 ரூபாய் கட்டணமும், கூடுதலாக ஜி.எஸ்.டி கட்டணமும்
செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கட்டணங்கள் பணம் இருப்பு
குறித்தான விசாரணை மற்றும் காசோலை புத்தக கோரிக்கை வைப்பது, வரி செலுத்துதல்
மற்றும் பணம் செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கட்டணங்கள்
வசூலிக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. போதுமான பணமின்மை காரணமாக
மறுக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணமும், ஜி.எஸ்.டியும்
விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு கட்டணம்
வங்கி
வழங்கும் அனைத்து டெபிட் கார்டுகளும் இலவசமாக தரப்படாது. கோல்டு கார்டுக்கு
ஜி.எஸ்.டி மற்றும் 100 ரூபாய் கட்டணமாகவும், இதே பிளாட்டினம் கார்டுகளுக்கு
ஜி.எஸ்.டி + 300 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும், கூடுதலாக கூரியர்
மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் கார்டுகளை, தவறான முகவரி மூலம் நீங்கள் திருப்பி
அனுப்பப்பட்டால்ம் நீங்கள் 100 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இவ்வங்கி
அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக