Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

பலாக்கொட்டை பொரியல்

Jackfruit Seed fry




தேவையான பொருட்கள்:
 பலாக்கொட்டை – 200 கிராம்
 இஞ்சி – ஒரு சிறிய துண்டு
 பச்சை மிளகாய் – ஒன்று
 கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
 தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

Jackfruit Seed fry

செய்முறை: 
  • பலாக்கொட்டையை நசுக்கி, தோல் உரித்து, உப்பு சேர்த்து, குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். 
  • வேகவைத்த பலாக்கொட்டையை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்துக் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும்.
நன்மைகள்: 
  •  இரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும்
  •  பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து 
  • உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம். 
  • பலாக்கொட்டை.”அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா’ என்ற 
  • தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் 
  • சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக 
  • உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 
  • 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள 
  • கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி 
  • போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், 
பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன                                                                                                                                                        

 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் 
உங்களின்  மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை 
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  
செய்து கொள்ளுங்கள்

  •  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக