தேவையான
பொருட்கள்...
- பச்சரிசி
- 8 டம்ப்ளர்
- உளுத்தம்பருப்பு
- ஒரு டம்ப்ளர்
- ஓமம்,
- வெள்ளை
எள்
- பெருங்காய
தூள்
- உப்பு,
- எண்ணெய்
பச்சரிசியை
ரெண்டு மணிநேரம் ஊற வெச்சு, வெயிலில் காய வச்சுக்கனும், உளுத்தம்பருப்பை லேசா
சிவக்க வெறும் வாணலில வறுத்து ரெண்டுத்தையும் மெஷின்ல கொடுத்து அரைச்சுக்கனும்.
தேவையான அளவு
மாவில் வெள்ளை எள், ஓமம் சேர்த்துக்கனும்...
பெருங்காயத்தூள்
சேர்த்துக்கனும்...
கொஞ்சமா எண்ணெய் சேர்த்துக்கனும்..
முறுக்கு அச்சுல மாவு ஒட்டாம வரும். அதுக்காகத்தான் எண்ணெய் சேர்த்துக்குறது. சிலர்
டால்டா சேர்த்துப்பாங்க.
தேவையான அளவு
உப்பு சேர்த்துக்கனும்...
தண்ணி விட்டு நல்லா பிசைஞ்சுக்கனும்...
ரொம்ப கெட்டியாவும் இல்லாம, தண்ணி அதிகமா சேர்க்காம பிசைஞ்சுக்கனும்.. சப்பாத்தி மாவு
போல இருக்கலாம்.
ஒரு பக்கம் வாணலில எண்ணெய் காய வச்சு, முறுக்கு அச்சுல மாவை போட்டு,
தட்டு, ஜல்லிக்கரண்டின்னு அவங்கவங்க வசதிப்படி, அதுல எண்ணெய் தடவி
பிழிஞ்சுக்கனும்.
எண்ணெய் காய்ஞ்சதும் முறுக்கு
மாவை பிழிஞ்சு போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க வறுத்தெடுங்க. பார்த்து கவனமா போடுங்க.
இல்லாட்டி எண்ணெய் தெறிச்சு கைலாம் புண்ணாகும்.
சுவையான முறுக்கு ரெடி, பிளாஸ்டிக் கவர்ல போட்டு வச்சிக்கிட்டா
ஒருவாரம் வரை மொறுமொறுப்பா இருக்கும். இல்ல என்னைப்போல எஃப்.பில கவனமா இருந்து
கோட்டை விட்டா அடுத்த நாளே நமத்து போகும்..
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
தண்ணி விட்டு நல்லா பிசைஞ்சுக்கனும்...
ரொம்ப கெட்டியாவும் இல்லாம, தண்ணி அதிகமா சேர்க்காம பிசைஞ்சுக்கனும்.. சப்பாத்தி மாவு
போல இருக்கலாம்.
ஒரு பக்கம் வாணலில எண்ணெய் காய வச்சு, முறுக்கு அச்சுல மாவை போட்டு,
தட்டு, ஜல்லிக்கரண்டின்னு அவங்கவங்க வசதிப்படி, அதுல எண்ணெய் தடவி
பிழிஞ்சுக்கனும்.
எண்ணெய் காய்ஞ்சதும் முறுக்கு
மாவை பிழிஞ்சு போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க வறுத்தெடுங்க. பார்த்து கவனமா போடுங்க.
இல்லாட்டி எண்ணெய் தெறிச்சு கைலாம் புண்ணாகும்.
சுவையான முறுக்கு ரெடி, பிளாஸ்டிக் கவர்ல போட்டு வச்சிக்கிட்டா ஒருவாரம் வரை மொறுமொறுப்பா இருக்கும். இல்ல என்னைப்போல எஃப்.பில கவனமா இருந்து கோட்டை விட்டா அடுத்த நாளே நமத்து போகும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக