Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 பிப்ரவரி, 2019

யார் இந்த முகிலன்?.

Related image


சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் விசாரணை அறிக்கையை மார்ச் 4 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


யார் இந்த முகிலன்?. ''சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, நண்ணீர் திருட்டு, அணு உலைக்கு எதிரான போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த முகிலன், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கூடங்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின், அவர் மீது தேசவிரோத வழக்கு பதியப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

ஸ்டெர்லைட் , கூடம்குளம் மற்றும் மணல் கடத்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர் சமூக ஆர்வலர் முகிலன். மேலும் இவர் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான முக்கிய ஆவணங்களை பத்திரிக்கையாளர்களின் முன்பு வெளியிட்டார். 


ஸ்டெர்லைட் போரட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு திட்டமிட்டது என்பதற்கும். மேலும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீ வைத்தது பொதுமக்கள் இல்லை என்பதை உறுதிபடுத்தும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் , தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறிவிட்டு மதுரைக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் காணவில்லை என்று கூறப்படுகிறது. 


இந்நிலையில் முகிலன் காணமல்போனது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொண்ர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி சத்தியநாராயணன் , நிர்மல் குமார் இந்த மனுவை விசாரித்தனர். 


இதுகுறித்து எஸ்.ஐ கூறுகையில் ‘ கூடுவாஞ்சேரியில் முகிலன் செல்போனின் இணைப்பு துண்டிக்கபட்டது. மேலும் அவர் பயணித்த ரயில் ஒலக்கூரில் நிற்காது’’ என்று கூறினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் வந்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை எழும்பூர் காவல்துறையினரிடம் தாக்கல் செய்ய ரயில்வே காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


மேலும் முகிலன் காணாமல்போன வழக்கின் விசாரணை அறிக்கையை மார்ச் 4 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

1 கருத்து: