Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 19 மார்ச், 2019

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது"

Related image



"ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது"

என்ற சொல்லாடல் ஏன் வந்தது 


புவியின் சுழற்சியின் மைய பகுதியில், உலகின் மேற்கையும் கிழக்கையும் இணைத்த கடலை வேலியாக கொண்ட தமிழ் நிலத்தின் கடற்கரையில் ஆறுகள் கடலில் கலக்கும் பொழிகள் அனைத்திலும் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தது

உலகின் மிக தொன்மையான மக்கள் வாழ்ந்த இடத்தில் ஒன்றான நமது நிலம் , உலகில் உள்ள அனைத்து பழங்குடிகள் வாழும் கடற்கரை இடத்திலும் தமிழ் மொழியின் தாக்கமும் அதன் மக்களின் பண்பாடுகளும் இருப்பது உண்மை என்றால்

முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை என்ற தொல்காப்பியத்தின் கூற்று படி பாக்கும் போது,

எத்தனை கடலோடிகள் எத்தனை முறை மீனவர்கள் கடலுக்குள் சென்று இருந்தால் உலகம் முழுவதும் சென்று இருப்பார்கள் என்று என்னும் போது


கடல் வழிக்காட்டிகள் என்று சொல்லப்படும் ஆமைகள் பயணம் செய்யும் வழிகள் ,

தமிழர்கள உலகமெங்கும் போன வழிகள் என்றும் ,

உலக பண்டைய துறைமுகங்கள் அனைத்தும் ஆமைகள் இனப் பெருக்கம் செய்யும் இடத்திலேயே அமைந்த இருக்கின்றன என்ற என் ஆய்வுகளும்


கடற்கரை குடும்பங்கள் எத்தனை கடலோடும் ஆடவர்களை அவர்களின் பயணத்தில் இழந்து இருக்கும் என்று எண்ணி பார்க்க வேண்டும்

ஆண்களை இழந்த அந்த குடும்பங்களின் நிலையையும் ,அவர்கள் கடன் பட்டு அமினா என்ற கடன் காரன் வந்து தொல்லை படுத்தும் நிலையையும் எண்ணி பார்க்கவேண்டும்

உலக நில நடு கோட்டிற்கு அருகில் உள்ள வெப்ப, மித வெப்ப நாட்டு மக்கள் கடல் நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை வணங்கும் போது

உலகை இணைக்க வைத்த தமிழ் கடலோடிகளை கொண்ட கடற்கரையில் ஏன்

"ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் விளங்காது"

என்ற சொல்லாடல் ஏன் வந்தது

என்று பார்க்கும் போது மேலே சொன்ன காரணிகளையும் பொருத்தி பார்க்க வேண்டும்

அதே போல் சூரியனை மெதுவாக சுற்றி வரும் சனி கிரகத்திற்கு
வடமொழியில் மெதுவாக செல்லும் என்ற பொருளில் சனி என்ற பொருள் இருக்கும் போது

தமிழ் மொழியில் சனி கிரகத்திற்கு ஆமை என்ற பொருள் கடலோடிகளால் இன்றும் வழங்கப்படுகிறது

சனி புகுந்த வீடு விளங்காது என்பதை கூட ஆமைகள் புகுந்த வீடு விளங்காது என்று சொல்லி இருக்கலாம்

நமது தமிழ் மக்கள் ஆமைகளை பெரிதும் வணங்கியவர்கள்
அதற்கான தரவுகள் கொட்டி கிடக்கின்றன

கடலில் வலசை செல்லும் ஆமைகள்,

நிலத்தில் வலசை செல்லும் காளைகள் யானைகள்

வானில் வலசை செல்லும் பறவைகள் என்று முறை வைத்து
இயற்கையை தமிழர்கள வணங்கியதால்

நம்மை ஆண்டவர்கள் மக்காலே கல்வி திட்டம் போல்

பண்பாடுகளை அழித்தால் தான் இந்த நிலத்தை ஆள முடியும் என்று சொன்னார் போல்

நம்மை அடக்கி ஆள, நம் திறன்களை ஒடுக்க இது போன்ற சொல்லாடல் நம்மை ஆண்டவர்களால் வந்து இருக்கலாம் என்பது என களப்பணியில் நான் பார்த்தது 


பங்குனி ,பஞ்சல், சித்தாமை என்று சொல்லப் படும்

ஆலிவ் ரிட்லி ஆமைகள் உலகில் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்

எல்லாவற்றிலும் தமிழரின் கடல் வழி பரவல்கள் உள்ள இடமாய் இருப்பது தற்செயல் அல்ல

என்பதை என் ஆய்வுகள் அறிவியல் முறைப்படி நிருபிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை

அந்த நாளில் நான் நிச்சயம் இருக்க மாட்டேன்
 

இன்னும் நிறைய இருக்கிறது இதை பற்றி சொல்ல

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக