Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 27 மார்ச், 2019

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!!!



Image result for கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!!



தர்பூசணி பழம் சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம். 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது.

தர்பூசணியை தொடர்ந்து கிர்ணிப்பழத்திலும் அதிக தண்ணீர் சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழமும் கண்ணுக்கு நல்லது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும் சி இன்ஃ பக்சன் தீர்ப்பதோடு சருமத்தை பொலிவடைய செய்யும்.

இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட மல்பெர்ரி பழத்தில் அதிக பாரம்பரிய மருந்து குணங்கள் உண்டு. வேரிலிருந்து பழம் வரை அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள் புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது.

நாவப்பழத்தின் தனித்துவமான சுவையே இப்பழத்தின் சிறந்த அம்சம். மற்ற பழங்கள் போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பலம் இது. 1.41 மில்லி இரும்பு சத்து , 15 மில்லி கால்சியம் மற்றும் 18 மில்லி வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம் இது.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!