இந்த உலகம்
ஒரு அதிசயப் புதையல். உயிர்களின் புதையல் என்று கூடச் சொல்லலாம். இன்னும்
அறியப்படாத கோடிக்கணக்கான விலங்குகளும், நீர்வாழ் உயிரினங்களும் பூமியில் நிச்சயம்
உண்டு. கண்டுபிடிக்கப்பட்டவற்றில் வியக்க வைக்கும் புதுமையான பத்து விலங்குகள்
இந்த வாரம்.
1.ஹிஸ்பேனியோலன் ஸொலினொடன்
ஹிஸ்பேனியோலா எனும் தீவிலிருந்து
கண்டுபிடிக்கப் பட்டதால் இதற்கு இப்படி ஒரு பெயர். பார்ப்பதற்கு எலி போல சாதுவாக
இருக்கும். மூக்கு குட்டி தும்பிக்கை போல நீண்டிருக்கும். விரல்கள் கொஞ்சம்
வித்தியாசமாய் பறவையின் விரல்களைப் போலிருக்கும். இதன் புலன்களெல்லாம் படு ஷார்ப்.
கேட்பது, முகர்வதிலெல்லாம் எக்ஸ்பர்ட்.
நன்றாக வளர்ந்தால் இது இரண்டரை அடி நீளம் வரை இருக்கும்.
நன்றாக வளர்ந்தால் இது இரண்டரை அடி நீளம் வரை இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சம் நிற வேறுபாடு இருந்தாலும்,
பெரும்பாலும் இது பிரவுன் நிறத்தில் தான் காணப்படுகிறது. அமைதியாய் இருக்கிறதே
என்று அருகில் போனால் லபக் என கடித்து விடும். கடித்தால் கடிக்கட்டும் என விட்டு
விடவும் முடியாது, காரணம் இதன் பற்களில் இருப்பது கொடிய விஷம் ! இப்போதைக்கு
ஹெய்தியிலும், கியூபாவிலும் மட்டும் தான் காணக் கிடைக்கிறது, அதுவும் படு
அபூர்வமாக.
2.கிவா கிர்சுடா
பார்ப்பதற்கு ஹோட்டல்களில் பொரித்து
வைத்திருக்கும் லாப்ஸ்டர் போல இருந்தாலும் இது லாப்ஸ்டர் கிடையாது. 2005ம் ஆண்டு
கலிபோர்னியாவிலுள்ள ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் பட்டது இது. பசிபிக் கடலில்
சுமார் 2200 மீட்டர் ஆழத்தில் நீந்திக் கொண்டிருந்தது !. அதுவரை இப்படி ஒரு உயிரி
இருப்பதே யாருக்கும் தெரியவில்லை.
இதன் நீளம் சுமார் பதினைந்து செண்டீ மீட்டர்.
உடலெங்கும் பளிச் நிறத்தில் செம்மரியாடு போல அலை பாய்கிறது ரோமம் . இந்த ரோமம்
தண்ணீரிலுள்ள விஷத் தன்மை யிலிருந்து இதன் உடலைப் பாதுகாக்க இயற்கை
அளித்திருக்கும் வரப்பிரசாதம் என்கின்றனர் விஞ்ஞானிகள். நண்டு வகைகளோடும்,
லாப்ஸ்டர் வகைகளோடும் இதற்கு கொஞ்சம் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
இந்த உயிரியைப் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
3.யர்போவா
ஜெர்போவா என வாசிக்கத் தூண்டும் இந்த விலங்கின்
பெயர் ஒரு ஒரு அரேபிய வார்த்தை. இதன் சரியான எபிரேய உச்சரிப்பு யர்போவா !
யர்போவாவின் ஸ்பெஷாலிட்டியே அதன் காதுகள் தான். யர்போவா மிக மிக அரிய வகை விலங்கு.
இன்னும் எத்தனை காலம் இதன் வாழ்க்கை பூமியில் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
மங்கோலிய, சீன , ஆப்பிரிக்க வறண்ட பகுதிகளில் அவ்வப்போது தென்படுகின்றன.
நீளமான வால், நீண்ட பின்னங்கால்கள், என
வியப்பூட்டுகிறது இந்த விலங்கு. நடக்க முன்னங்கால்களை அதிகம் பயன்படுத்தாமல்,
கங்காருவைப் போல தாவித் தாவி ஓடுவது இதன் சிறப்பு. யாராவது துரத்தினால் இது
மின்னல் வேகத்தில் ஓடும். மணிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்தில் இது பாய்ந்து போகும்.
அதிக சூடான பாலை நிலங்கள் தான் இதன் வசிப்பிடங்கள்.
காது வெறும் காட்சிக்கானதல்ல, அதற்கு மிகக்
கூர்மையான கேட்கும் திறனும் உண்டு. எதிரி எத்தனை தொலைவில் இருந்தாலும் ஒரு மெல்லிய
சத்தத்தைக் கூட கேட்டு மறைந்து விடும். அதனால் தான் இதைப் பார்ப்பதே மிகக்
கடினமாய் இருக்கிறது. இதன் வாழ்நாட்கள் சுமார் 6 ஆண்டுகள்.
4ஹே..ஹே..
கூப்பிடுவதற்கு வசதியான பெயர் இதற்கு ! ஹே..ஹே,
ஐ…ஐ…. , ஆய்ய்ய், ஆய்ய்ய்ய் என வசதிப்படி அழைக்கிறார்கள் இதை. பார்வைக்கு
சாத்தானின் மினியேச்சர் போல இருக்கும் இந்த விலங்கு உண்மையில் பரம சாது.
மரங்கொத்திக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டுமே உணவுக்காக மரப்பட்டைகளையே
நாடுகிறது. மரங்கொத்தி அலகினால் மரத்தைக் கொத்தித் துளை உண்டாக்கி புழு
பிடிக்கும். இது பற்களினால் மரத்தைக் கடித்து துளை உண்டாக்கி விரல்களால் கிளறி
பூச்சி பிடிக்கும்.
மெடகாஸ்கர் பகுதியில் “ஹே..ஹே” என்றால்
“எனக்குத் தெரியாது” என்று அர்த்தமாம். இதோட பெயர் என்னன்னு தெரியாதவங்க இந்தப்
பெயரை இதற்குப் போட்டு விட்டார்கள். இது ராத்திரியெல்லாம் கொட்டக் கொட்ட நைட்
ஷிப்ட் பார்த்து விட்டு பகல் முழுதும் குறட்டை விட்டுத் தூங்கும். இந்த உயிரினம்
வேகமாக அழிந்து கொண்டு வரும் உயிரினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 சாய்கா
குண்டு குண்டாக செம வெயிட்டாக இருக்கும்
விலங்கு இது. மானைப் போல இருந்தாலும் இதன் தலையும், மூக்கும், கொம்புகளும் படு
பயங்கர வித்தியாசம். வெயில் காலத்தில் மண்ணுக்குள் தனது மூக்கை அடிக்கடி புதைத்து
வைத்து குளிர் காயும் ! குளிர் காலத்தில் ஹாயாக காற்றிலிருந்தே வெப்பம் எடுக்கும்
! அழகியல் விதிப்படி சாய்காவிலும் பெண்களுக்கு மட்டும் தான் கொம்பு.
இதன் கொம்புக்கு மகிமை, மருத்துவம் என்றெல்லாம்
கதை விட்டு “மண்ணுளிப் பாம்பு” போல சகட்டு மேனிக்கு தேடித் தேடிக்
கொல்கிறார்களாம். இது தவிர அதனுடைய தோல், இறைச்சி போன்றவையும் வேட்டைக்குக்
காரணமாகிவிடுகின்றன. மங்கோலியா, ரஷ்யா, கஸகஸ்தான் போன்ற நாடுகளின் சில பகுதிகளில்
இன்னும் சாகாமல் வாழ்கிறது சாய்கா. படு வேகமாக அழிந்து வருகின்ற உயிரினங்களின்
பட்டியலில் இந்த விலங்கும் இருக்கிறது.
6. ஸ்லெண்டர் லாரிஸ்
இது நம்ம ஊர் விலங்கு. இந்திய இலங்கை சதுப்பு
நிலக் காடுகளில் காணப்படுகிறது. அப்படியே இலங்கையிலும் இந்த விலங்கினம் உண்டு.
அதைத் தாண்டி உலகின் மற்ற பாகங்களில் இது காணப்படுவதில்லை. இந்த விலங்கு
பக்கத்தில் வந்தால் கூட அதைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு
தம்மாத்துண்டு சைஸ் விலங்கு இது.
பகலில் தூங்கி விட்டு, இரவில் குழுவினரோடு ஜாலியாக சுற்றித் திரியும் விலங்கினம் இது. வருடத்துக்கு ஒரு முறை தான் குட்டியிடும், பெரும்பாலும் இரட்டைக் குட்டிகளை இடும் என்பது சுவாரஸ்யமானது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்று. இதன் இருப்பு பூமியிலிருந்து வெகு விரைவிலேயே துடைக்கப்பட்டு விடலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் அச்சம்.
பகலில் தூங்கி விட்டு, இரவில் குழுவினரோடு ஜாலியாக சுற்றித் திரியும் விலங்கினம் இது. வருடத்துக்கு ஒரு முறை தான் குட்டியிடும், பெரும்பாலும் இரட்டைக் குட்டிகளை இடும் என்பது சுவாரஸ்யமானது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்று. இதன் இருப்பு பூமியிலிருந்து வெகு விரைவிலேயே துடைக்கப்பட்டு விடலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் அச்சம்.
7 கிட்னா
விலங்குகள் குட்டி போட்டுப் பாலூட்டும்… வெயிட்
வெயிட்… இந்த விலங்கு அந்த வகையில் வராது. இது முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும்
வித்தியாசமான விலங்கு. மூக்கு நீண்ட இந்த விலங்கின் பெயர் கிட்னா. எறும்பு
தின்னிக்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால் சரியாகச் சொல்லி விடுவீர்கள்.
அதே தான் ! இதுவும் எறும்புகளைத் தின்று உயிர் வாழும் விலங்கு தான் ! முள்ளம்
பன்றி முடி போல இதன் மேனியெங்கும் குத்தும் முடிகள் நிரம்பியிருக்கும். ஆனால்
முள்ளம்பன்றியல்ல.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இதன்
மூதாதையர் இருந்திருக்கின்றனர் என்பது ஸ்பெஷல் செய்தி. இப்போது ஜெனீவா, மற்றும்
ஆஸ்திரேலியப் பகுதிகளில் காணப்படுகின்றன. பாதி பாம்பு, பாதி பெண் என ஒரு கிரேக்கக்
கடவுள் உண்டு. அதன் பெயரான தின்று வாழும் என்றாலும் இது நமக்குத் தெரிந்த
எறும்புத் தின்னி அல்ல ! வித்தியாசமான விலங்குகளின் பட்டியலில் விஞ்ஞானிகளின்
பேவரிட் விலங்குகளில் இதுவும் ஒன்று.
8. டார்சியர்
சுமார் நாப்பத்தைந்து மில்லியன் வருடங்களாக
இந்த விலங்கின் நீட்சி இருப்பதாய் சொல்கிறது விஞ்ஞானம். ரொம்பவே ஆச்சரியம் தான்.
பார்த்தால் ரொம்பக் குட்டியாய், புயல்காற்றுக்கே அழியும் இனம் போல தோன்றுகிறது.
டார்சியரின் ஸ்பெஷலே அந்த கண்கள் தான். இன்னும் சொல்லப் போனால் அதன் கண்ணும்
மூளையும் ஒரே அளவு தான். ஒரு காலத்தில் உலகெங்கும் பரவியிருந்த இந்த விலங்கு
இப்போது ஆசியாவின் தென் மேற்குப் பகுதிகளில் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக
இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் காட்டுப்பகுதிகள் தான் இதன் வாழ்விடம்.
இருப்பதே தெரியாமல் பம்மி இருந்து இரையைத்
தாவிப் பிடிப்பது தான் இதன் வேலை. ஏதேனும் பூச்சியைக் கண்டால் தாவிப் போய் அதன்
மீது விழுந்து அதை அமுக்கும். அப்புறம் அதைச் சாப்பிடும். சமயத்தில் இது பறவைகள்,
பாம்புகள், பல்லிகளைக் கூட கபளீகரம் செய்து விடும். அதற்கு உறுதுணையாக இருப்பது
இதன் நீளமான முன்கால்கள் தான். இந்த விலங்கின் உடலளவு வெறும் பத்து, பதினைந்து
சென்டீ மீட்டர் நீளம் தான்.
9 பிரில் கழுத்து ஓணான்
இதற்கான பெயர்க்காரணத்தை நான் சொல்லாமலேயே
புரிந்து கொள்வீர்கள். கழுத்தைச் சுற்றி பிரில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்
வந்தது. ஆஸ்திரேலியாவில் இதை பை-சைக்கிள் லிசார்ட் என்று அழைக்கிறார்கள்.
யாரையாவது பயமுறுத்த வேண்டுமென்றால் சட்டென கழுத்தைச் சிலிர்க்கிறது. உடனே சிறகு
சட்டென விரிய எதிரே இருக்கும் எதிரிகள் எஸ்கேப். ஆஸ்திரேலியாவிலும் ஜெனீவாவின் சில
பகுதிகளிலும் இந்த ஓணான் காணப்படுகிறது.
சுமார் மூன்று அடி நீளம் வரைக்கும் வளர்ந்து
மிரட்டும் அளவில் இருப்பது இதன் பலம். மரத்தோடு ஒட்டிக் கொண்டு ஒரு மரக்கிளையைப்
போலவே இருந்து இரையைப் பிடிக்கும். உற்றுப் பார்க்காதவரை இப்படி ஒரு ஓணான் ஒட்டிக்
கொண்டிருப்பதே தெரியாது.
10. புரோபோசிஸ் குரங்கு
கொஞ்சம் சப்பாத்தி மாவை அதிகமா பெசஞ்சு தொங்க
விட்டா மாதிரி ஒரு மூக்கு. இந்த மூக்கை அசிங்கமா நினைக்காதீங்க. இந்த குரங்கு
வகையில் இந்த மூக்கு தான் ஹைலைட்டே. மூக்கு பெருசா இருக்கும் ஆண் குரங்குகளின்
பின்னால் அசிங்கமா இருக்கேன்னு நினைக்காதீங்க. சப்பாத்தி மாவு போல இருக்கும் இந்த
மூக்கு தான் ஹைலைட்டே. எவ்வளவுக்கு பெரிய மூக்கு இருக்கோ, அந்த அளவுக்கு ஐயாவுக்கு
“லேடீஸ்” மத்தியில செல்வாக்கு அதிகமாம் ! தெற்காசியத் தீவான பொரீனோ, இந்தோனேஷியா
உட்பட உலகின் சில நாடுகளில் இவை காணப்படுகின்றன.
இரண்டரை அடி நீளமும், சுமார் 10 கிலோ எடையும்
உள்ள இந்த குரங்கு குடும்பம் குடும்பமாக வாழும். மனிதர்களைப் போன்ற பல இயல்புகள்
இந்த குரங்குகளிடமும் உண்டு. படு வேகமாக இந்த குரங்கு இனம் அழிந்து கொண்டு வருவது
தான் வேதனையான விஷயம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக