Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஏப்ரல், 2019

8 அமைச்சர்கள்… மொத்தமாக சுருட்டி கொடுக்கப்பட்ட கரன்சி! எடப்பாடி & பன்னீர் வட்டாரத்தை கதிகலங்க வைத்த தகவல்…

8 அமைச்சர்கள்… மொத்தமாக சுருட்டி கொடுக்கப்பட்ட கரன்சி! எடப்பாடி & பன்னீர் வட்டாரத்தை கதிகலங்க வைத்த தகவல்… க்கான பட முடிவு

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



ங்களது ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருக்கிறார்கள், அவர்கள் தேவைப்படும்போது வெளியே வருவார்கள் என்று சொல்லி வந்தார் தினகரன். அவர்
சொன்னதைப்போலவே தற்போது எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் பல தகவல்கள் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பேசிவந்த அவர்கள், நேற்றும், அதிமுகவில் உள்ள எங்களின் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஸ்லீப்பர் செல்கள் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள் என்றும் வெற்றிவேல் தெரிவித்தார்.
அப்படிப்பட்ட ஸ்லீப்பர் செல்களாக இருக்கிற அமைச்சர்கள் கடந்த தேர்தலில் தினகரனுக்கு தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் எடப்பாடி & பன்னீர் வட்டாரத்தை கதிகலங்க வைத்திருக்கிறது
மக்களவைத் தேர்தலுக்காகவும், இடைத்தேர்தலுக்காகவும் கொடுக்கப்பட்ட பணம் அதிமுகவில் சரியாக கொண்டு போய் சேர்க்கப்படவில்லை என்ற புகார்கள் தேர்தலுக்குப் பின் அதிகமாயின. இதுபற்றி எடப்பாடி விசாரிக்கும் போது தான் அதிமுகவின் நிதி ஒழுங்காக மக்களிடம் போய் சேராதது மட்டுமல்ல, 10 அமைச்சர்கள் தினகரனுக்கே தேர்தல் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் எடப்பாடியை விழி பிதுங்க வைத்திருக்கிறது.
ஏற்கனவே சுமார் 8 அமைச்சர்களை தினகரனோடு போனில் டிபன் சாப்டாச்சா, டீ குடிச்சாச்சா என விசாரிக்கும் அளவிற்கு இருப்பவர்கள் என்பதால் அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடிக்கு தெரிந்தாலும் அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தொடர்ந்து தினகரனோடு தொடர்பில் இருக்கும் அவர்கள் தேர்தல் நிதியும் வாரி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் எப்படியும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ரிசல்ட் வரப்போவதில்லை என்பதை அறிந்த அவர்கள். தேர்தல் முடிவுக்குப் பின் யாருமே எதிர்பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், அதிமுகவில் வலுவான ஆளுமை இல்லாததை மனதில் வைத்து, தினகரனின் தயவு நமக்குத் தேவை என்ற கணக்கு போட்டுதான் அமைச்சர்கள் தேர்தல் நிதி கொடுத்திருக்கிறார்கள்.
அதுவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தான் தினகரனுக்கு அதிக நிதி கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலும் முதல்வருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் ஷாக்கான அவர் இப்படி கூடவே இருந்துகொண்டு சகஅமைச்சர்களே இப்படி செய்யலாமா? என நெருக்கமான அமைச்சர்களிடம் புலம்பித்தள்ளுகிறாராம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக