Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 27 மே, 2019

நரைமுடிக்கு தடைபோடும் கொட்டாச்சி…!

 

 Image result for நரைமுடிக்கு தடைபோடும் கொட்டாச்சி… 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்

 

தேங்காய் துருவி விட்டு மூடியை தூக்கி எறிபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க…

 


தேங்காய் பயன்படுத்தாத வீடுகளே இன்று இல்லை. மனைவிக்கு சமையலுக்கு உதவி செய்ய விரும்பும் கணவர்கள் கூட தேங்காய் துருவிக் கொடுப்பதைப் பார்த்திருப்போம். அப்படி தேங்காயை துருவி விட்டு நாம் வீசி எறியும் மூடியில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது.

தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அடர்த்தி, பளபளப்பு மற்றும் கருமையான கூந்தல் இவைகளை பெற ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய கனவே இருக்கும். அதற்கு காரணம் பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது.

இது உண்மையாக இருந்தாலும் கூட அடர்த்தியான நீண்ட கூந்தல் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அழகான கூந்தலை பெறுவதற்கும், அப்படியே பெற்று விட்டாலும் கூட, அவை நீண்ட நாட்களுக்கு நீடித்து நிற்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பி போயுள்ளீர்களா? கவலை கொள்ளாதீர்கள், அதற்கு பல தீர்வுகள் உள்ளது.இயற்கையான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சில வீட்டு சிகிச்சைகளை கையாள வேண்டி வரும்.

உங்கள் கூந்தல் வறண்டு போய் அதிகமாக கொட்டினால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா பெண்களே? ரசயானம் கலந்த விலை உயர்ந்த கூந்தல் பொருட்களின் பின்னால் ஓடினாலும் கூட சில நேரம் அவைகள் பயனளிப்பதில்லை.



அதனால் இயற்கையான சிகிச்சைகளை நாடுவதே சாலச் சிறந்தது. மேலும் இப்படி இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகளில் இருந்தும் தப்பிக்கலாம் அல்லவா? அதனுடன் சேர்த்து உங்களுக்கு நல்ல பலனையும் அளிக்கும்.

கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது. இவைகளை கொண்டு பெண்களுக்கான கூந்தல் பராமரிப்பை கையாளுவது என்பது இயற்கையுடன் கைகோர்த்து நடத்தப்படும் ஒரு எளிய செயல்முறையே.
புதிய முறையில் கூந்தலை வளர்த்து அதனை பராமரிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் அதற்கு ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருள் உள்ளது.

அப்படி நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் ஒரு பொருள் தான் தேங்காய் பால். தேங்காய் பால் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். சாதரணமாக வீட்டில் கிடைக்க கூடிய பொருளாகிய அதனை கொண்டு செய்யும் சிகிச்சையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

தேங்காய் மூடிகள் நெல்லிக்காய் ஓடுகள் தேங்காய் எண்ணெய் -1/2 லிட்டர் தயாரிக்கும் முறை

முதலில் தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்க வேண்டும். பின் அதனை பொடி செய்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அதை வெயிலில் சில நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும். இதே முறையில், தேங்காய் ஓடுகளுக்கு பதிலாக, நெல்லிக்காய் ஓடுகளை கூட பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

தேங்காய் ஓடுகள் கொண்டு தயாரித்த எண்ணெய்யை தலை முடிகளில் தடவி அப்படியே இருக்கலாம் அல்லது எண்ணெய் தேய்த்து சில மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

நன்மைகள்

இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால், நரைத்த முடிகள் மறைவதைக் காணலாம். இந்த எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.
 
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக