இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
கனவுகள்
என்பது உறக்கத்தில் நாம் அன்றாடம் செய்யக்கூடிய செயல்களால் எதிர்காலத்தில்
ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை முன்கூட்டியே அறிவிக்கின்ற ஒரு ஏழாம் அறிவால்
செய்யப்பட்ட ஒரு சாவி ஆகும்.
கனவுகள்
குறித்து புராணங்களிலும் காப்பியங்களிலும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளனர்.
மனோதத்துவ ரீதியாக ஆழ்மனமானது கனவின் மூலம் எதிர்காலத்தில் நடக்க போகும் நிகழ்வை
முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அற்புத நுழைவாயில் ஆகும்.
நல்ல
மகிழ்ச்சியான கனவுகள் நல்ல பலன்களையும், தீய கனவுகள் தீய பலன்களையும் கொடுக்கும்.
சில நேரங்களில் கனவில் நடக்கும் தீய செயல்களால் நல்ல வினைகளும், நல்ல கனவில்
நடக்கும் செயல்களால் தீய வினைகளும் ஏற்படும்.
கனவுகள்
காணும் நேரங்களின் அடிப்படையில் அதனால் ஏற்படும் விளைவுகள் மூன்று காலங்களுக்கு
தகுந்தாற் போல் பகுக்கப்பட்டுள்ளது.
உறங்கியவுடன்
ஏற்படும் கனவுகள் இறந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையதாக
இருக்கும்.
நள்ளிரவில்
தோன்றக் கூடிய கனவுகள் நடைமுறை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில்
உருவாகும்.
விடியற்காலையில்
ஏற்படும் கனவுகள் வருங்காலத்தை பற்றி சொல்லும் கனவுகளாக அமையும்.
கனவுகளில்
சில ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சியானதாகவும், பயமூட்டக் கூடியதாகவும், நம்ப முடியாததாகவும்
இருக்கும்.
இரவில்
படுக்கும் போது வரும் கனவுகளில் சிலவற்றை, காலையில் எழுந்திருக்கும் போது நம்மால்
ஞாபகப்படுத்திப் பார்ப்பது என்பது கடினமானதாக இருக்கும்.
அதுவே
பயத்தை ஏற்படுத்தும் கனவுகள் என்றால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். ஆனால், சரியாக
தெளிவாக இருக்காது. ஏனெனில் நமது மனம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் போது,
அந்த கனவுகளை சிறிது நேரம் வேண்டுமென்றால் ஞாபகத்தில் வைத்திருக்கும். ஆனால்,
நீண்ட நேரம் மனதில் இருக்காது.
மேலும்
கனவுகள் தூக்கத்தின் போது மட்டும் வருவதில்லை, விழித்திருக்கும் போதும் கூட வரும்.
ஆனால், அத்தகைய கனவுகள் மனதில் நீங்காது இடம் பெற்றிருந்தால் மட்டுமே வரும்.
இரவில்
உறங்கும் போது, ஒருவருக்கு குறைந்தது 2 - 4 கனவுகள் வரும் வாய்ப்புள்ளது. ஆனால்,
அவை அனைத்தையும் ஞாபகப்படுத்த முடியாது. அவை அனைத்தும் மறந்துவிடும்.
ஒரு
சில கனவுகளை மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும். ஏனெனில் நமக்கு வரும் கனவுகள்
உங்கள் மனதை அல்லது உணர்ச்சியை பாதிக்கும் வகையில் இருந்தால், அந்த கனவுகள்
மறக்காமல் இருக்கும். எனவே கனவுகள் அனைத்தும் ஒவ்வொருவரின் உணர்ச்சி, ஆசை,
உள்ளத்தின் பாதிப்பு, பயம் போன்ற பல காரணங்களால் வரும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக