Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 மே, 2019

முதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…

Image result for முதல்முறை வொர்க் அவுட் செய்வோர் கவனத்துக்கு…


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


டற்பயிற்சி செய்யும்போது தொடக்கத்தில், உடலிலும் சிந்தனையிலும் சில மாற்றங்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் எலும்பு மருத்துவர் சித்தரஞ்சன்.
எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், சிக்ஸ்-பேக் வைக்க வேண்டும் என்பதற்காகவும் உடற்பயிற்சி செய்பவர்கள், ஓரே நாளில் பலன் கிடைத்து விடாது என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும், இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். மூளை உற்சாகமாக இயங்கும்.
தொடக்கத்திலேயே கடுமையான வொர்க்-அவுட்டுகளைச் செய்யக் கூடாது. தசைகளில் அழற்சியும், தசைநார்களில் பிரச்னையும் ஏற்படலாம். காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாத அளவுக்கு பலவீனமாக உணர்வார்கள். உடற்பயிற்சி செய்து முடித்ததும், சுமார் ஐந்து நிமிடங்கள் ஃபோம் ரோலரைப் (Foam Roller) பயன்படுத்தி தசைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

 கடுமையான வொர்க்-அவுட் செய்பவர்களுக்கு, உடலில் `கிரெலின்’ (Ghrelin) எனப்படும் பசிக்கான ஹார்மோன் சுரப்பு சீரற்ற நிலைக்குச் செல்லலாம். இதனால் பசியின்மை ஏற்படும். டீஹைட்ரேஷன் என்கிற நீர்வறட்சி நிலையும் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  
 உடற்பயிற்சி மூலம் மாதம் இரண்டு முதல் மூன்று கிலோவரை எடை குறைப்பதுதான் ஆரோக்கியமானது. ‘நேரம் கிடைக்கும்போது மட்டுமே ஜிம் செல்வேன்’ என்பவர்களுக்கும் இது பொருந்தும். அதற்கு மேல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முறையான ஆலோசனை பெற்று அதற்குரிய பயிற்சிகளை எடுக்க வேண்டும்.  
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!