Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 மே, 2019

சுகங்கள் தரும் துக்கங்கள்


 Image result for சுகங்கள் துக்கங்கள்



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



சப்தம் - ஸ்பரிசம் - ரூபம் - ரசம்- கந்தம் என்பவை ஐந்து சுகங்கள் எனப்படும். ஆனால் உண்மையில் இவைகள் தான் பல சமயங்களில் துக்கங்களுக்கும் காரணமாகிறது என்பது சத்தியமே. அதற்குக் கீழ்க்கண்ட உதாரணங்கள்
சப்தம் ஒன்றை மட்டுமே சுகத்திற்கு சாதனம் என்று பிரமித்து, மான் உயிரை விடுகிறது. (காட்டில் வேடர்கள் வாத்தியங்களை வாசித்து அந்தக் கானத்தில் காதைக் கொடுத்து மான்கள் மெய் மறந்திருக்கும் போது தான் அவற்றைக் கொல்லுகின்றனர் ).
பெண் யானையின் ஸ்பரிச சுகத்திற்கு ஆசைப்பட்டு காட்டில் ஆண் யானை அதன் கூடவே சென்று மனிதர்களின் கைகளில் அகப்பட்டு திண்டாடுகிறது.
தீப ஜ்யுவாலை ரூபத்தில் ஆசைகொண்டு விட்டிற் பூச்சி அதில் விழுந்து அதன் உயிரையே மாய்த்துக் கொள்கிறது.
உணவுக்காக மீன்கள் தூண்டிலில் அகப்பட்டு இறக்கின்றன.
வாசனைக்கு ஆசைப்பட்டு வண்டு மலரில் இருக்கும் போது, மலர் மூடிக் கொண்டதும் வெளியே வர முடியாமல் தவிக்கிறது.
இவ்விதம் ஐந்தில் ஒவ்வொன்றை மட்டும் இன்பத்திற்கு சாதனம் என எண்ணிச் செல்லும் பிராணிகள் எதுவுமே அங்கு இன்பத்தை அடையவில்லை ; என்பது மட்டுமல்ல. மிகுந்த துன்பத்தையும் அடைகின்றன, இப்படி இருக்கும் போது, இந்த ஐந்தையுமே சுகத்திற்க்குச் சாதனங்கள் என எண்ணிச் செல்லும் மனிதன் எந்த கதியை அடையக் கூடும் என்பதை ஆழ்ந்து சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம். ஆகவே, மேற்கண்ட சுகங்களில் இருந்து விடுபட நாம் இறைவனை வேண்டுவோம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக