இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
வடசென்னை மக்களை அச்சுறுத்தி வந்த
சைக்கோ கொலைகாரன் முனியசாமி மானாமதுரை ரயில் நிலையம் அருகே கைது
செய்யப்பட்டுள்ளான். நள்ளிரவில் ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக போதையில்
விழுந்து கிடக்கும் நபர்களை குறித்து சைக்கோ கொலைகாரன் தாக்குதல் நடத்தியுள்ளான்.
இதனால் வடசென்னை மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளிவர முடியாமல்
அச்சத்தில் ஆழந்தனர்.
இந்த நிலையில் கண்காணிப்பு கேமராவில்
பதிவான சைக்கோ கொலைகாரன் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டனர். சென்னை மாதவரம்
பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில்
படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளி துண்டித்ததில்
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி
மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை
துண்டித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சைக்கோ கொலைகாரனை பிடிக்க
காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மானாமதுரை
ரயில் நிலையம் அருகே சைக்கோ கொலைகாரன் முனியசாமியை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரையில் சைக்கோ கொலையாளியை சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக