இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன
பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அமெரிக்கா அதிகரித்துள்ளது. இதனால்
இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால்
இந்தியா உட்பட உலக நாடுகள் பெரிதளவு பாதிக்கப்படும் என பொருளாதார வல்லுநர் ஆனந்த்
ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன்
இது குறித்து பேசிய அவர், “பல
ஆண்டுகளாக தொடக்கத்திலிருந்து இந்த அதிரடி முடிவை அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டு
வருகிறது. அதன்படி இறக்குமதி பொருள்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு ஆண்டு
வரி விதித்தனர். இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த சீனாவும் அமெரிக்காவுக்கு
பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு
வரியை அதிகரித்தது. இந்த வர்த்தகப் போர் காரணமாக இந்தியா மட்டுமல்லாமல் பல
நாடுகளுக்கு இடையே பொருளாதார சரிவு மற்றும் வீழ்ச்சி ஏற்படும்”
அது மட்டுமின்றி ஒபாமா ஆட்சியின் போது
இந்தியாவின் மீது பல விதிமுறைகளை அமெரிக்கா விதித்தது. அதில் மிக முக்கியமான ஒன்று
இரான் நாட்டில் இருந்து இந்தியா பெட்ரோல் வாங்கினால் இந்தியாவின் பொருட்களுக்கு
வரி அதிகரிக்கப்படும் என எச்சரித்திருந்தது. மன்மோகன் சிங் காலத்தில் ரூபாய்காக
ஈரானிடம் இருந்து பெட்ரோல் பயப்படாமல் வாங்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் இந்த
ஆட்சியில் அது நடக்கவில்லை.
அமெரிக்க பொருளாதார செயலர் வில்பர்
ராஸ் டெல்லி வந்தபோது, இந்தியா உடனான கொள்கையை சற்றும் விருப்பமில்லை என்றார்.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும், GSP க்கும் உரிமை தரமாட்டோம் என 4
மாதங்களாக மிரட்டி கொண்டிருந்தார். அமெரிக்கா இந்திய தகவல் தொழில்நுட்பத்
துறையிலும், மருத்துவத் துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு
வருகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு மிகவும்
மோசமாக உள்ள நிலையில் அமெரிக்காவின் செயல்களை அடுத்து வரும் அரசாங்கம் தைரியமாக
எதிர்த்து நின்று இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு போக வேண்டும்” என்றும்
ஆனந்த் ஸ்ரீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக