இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
உலகில் நடக்கும் சில விஷயங்கள் நமக்கு புரியாத புதிராக இருந்தாலும், அந்த புதிருக்கான விடைகள் இன்றும் நம்மால் அறிந்து கொள்ள முடியாத மர்மங்களாகவே உள்ளன.
உலகில் எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களுக்கு காரணம் என்னவென்றோ அல்லது ஆதாரமோ இல்லாமல், அதற்கான விடையை தேடி இன்று வரை சென்று கொண்டிருக்கிறோம்.
கொலை செய்தது யார்?
டைட்லோவ் பாஸ் மைஸ்ட்ரி உலகில் இன்று வரை தீர்க்க முடியாத மர்மங்களில் ஒன்றாகவே இருக்கிறது.
1959ஆம் வருடம் சோவியத் ஒன்றியத்தில் உள்ள யூரல் மலைப்பகுதி ஒன்றில் நிகழ்ந்த 9 பேர் கொண்ட மலையேற்ற குழுவினரின் மர்மமான மரணங்கள்.
கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் விடுமுறை தினத்தை கழிக்க மலையேற்றத்திற்காக அருகில் இருந்த டைட்லோவ் பாஸ் என்ற பனி நிறைந்த மலைப்பகுதிக்கு சென்றனர்.
பல வாரங்கள் ஆகியும் சென்றவர்கள் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்து தேடச் சென்றவர்கள், விநோதமான முறையில் அவர்கள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாக்குகள் வெட்டப்பட்டும், கண்கள் வெளியே எடுக்கப்பட்டும், நெஞ்சில் எலும்புகள் வெளியில் எடுக்கப்பட்டும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
அங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்களை ஆராய்ந்து பார்த்ததில் அவை கண்டிப்பாக மிருகங்களினால் நேரவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால், பல கிலோமீட்டர் தூரம் வரை யாருமற்ற அப்பகுதியில் ஏற்பட்ட இவ்விநோதமான மரணங்கள் குறித்த மர்மங்கள் இன்று வரை தெளிவில்லாமலே இருக்கின்றது.
யார் இப்படி கொலை செய்திருப்பார்கள்? எதற்காக கொலை செய்திருப்பார்கள் என்ற பல கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை மர்மமாகவே இருக்கிறது.
யார் இந்த மர்ம பெண்?
அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட போது ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், மர்மங்களுக்கும் இன்றும் விடை கிடைக்காமல் இருக்கின்றன.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டப்போது பதிவான பல்வேறு புகைப்படங்கள் அனைத்திலுமே ஒரு குறிப்பிட்ட பெண்ணின் உருவம் அதிகமுறை பதிவாகி இருக்கிறது.
யார் அந்த பெண்?
எதற்காக இங்கு வந்தார்? என்பதைப் பற்றிய ஆராய்ச்சியும் நடந்தது.... இன்று வரை நடந்து கொண்டே தான் இருக்கிறது.
இப்பெண்மணி கென்னடியை கொல்ல உதவிய ரஷ்ய உளவாளியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.
அங்கிருந்த பலரது கேமராக்களிலும் இப்பெண்மணியின் உருவம் பதிவானது தற்செயலான ஒன்றா அல்லது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றா என்றும், மேலும் அப்பெண் அப்பகுதியை விட்டுச்சென்ற சில நொடிகளில் தான் கென்னடியை சுட்டுக் கொன்ற அந்த கோர சம்பவம் நடந்தேரியதால் இது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக