Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 ஜூன், 2019

மணியான தகவல்.




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:

Facebook


Join our Whatsapp Group





  • மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.

  • மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

  • கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.

  • இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.

  • மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.

  • மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

  • மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.

  • இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.

  • கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.

  • பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

  • பூஜைவேளையில் கோயிலில் காண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும்.பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும்.

  • இறைவன் உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும் ஒலிக் குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது.

  • புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது.

  • இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் "ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி" என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம்.

  • மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை மணி ஒலிப்பது நன்மை தரும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக