Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 10 ஜூன், 2019

M.Phil படிப்பு இனி கிடையாது! வரைவு திட்டத்தின் முக்கிய ஆலோசனை!

Image result for M.Phil படிப்பு 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com 


புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு திட்டத்தில், மும்மொழி கொள்கை வேண்டும், தமிழர்கள் கட்டாயம் இந்தி படிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்ட செய்தி மட்டுமே முக்கியத்துவம் பெற்றது. ஆனால்,

எம்.பில் படிப்பு தேவையற்ற ஆணி, அவை பிடுங்கப்பட்டே ஆகவேண்டும் என்ற இன்னொரு கன்னிவெடியையும் அந்த வரைவுதிட்டம் புதைத்து வைத்திருக்கிற செய்தி இப்போது வெளியாகி உள்ளது. நாடெங்கிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் எம்.பில். ஆய்வில் ஈடுபட்டு 
இருக்கும்போது, திடீரென அப்படிப்பே தேவையில்லை என்ற ஆலோசனை ஏற்கப்படும்பட்சத்தில், லட்சக்கணக்கான மாணவர்களின் நேரம், உழைப்பு, பணம் அனைத்தும் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வழங்கியுள்ள ஆலோசனையின்படி, இனிமேல் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., உள்ளிட்ட இளங்கலை படிப்புகள் நான்கு வருடங்களாகவும், எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி., உள்ளிட்ட முதுகலை படிப்புகள் இரண்டாண்டுகளும், இரண்டாவது ஆண்டில் முழுமையாக ஆராய்ச்சிக்கு மட்டும் ஒதுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், எம்.பில் படிப்புகளுக்கான தேவை இருக்காது என்றும், 4 வருட இளங்கலை படிப்பு முடித்த ஒருவர் நேரடியாக பி.ஹெச்டி படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதிபெறுவார் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே எம்.பில் படித்த/படிக்கிற மாணவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டு அவர்கள் உழைப்பிற்கு மரியாதை செலுத்தும்வகையில், கால அவகாசம் தரப்பட்டு இந்த ஆலோசனை நடைமுறைப்படுத்தப்படுமா அல்லது ஒரே ஒரு தொலைகாட்சி அறிக்கை வாயிலாக 15 லட்சம் கோடியை செல்லாக்காசாக்கிய அவசரகதியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!