Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 27 ஜூலை, 2019

பூமியைக் குளிர்விக்க 17 ரில்லியன் மரங்கள் நடவேண்டும் : புதிய ஆய்வில் தகவல்!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் அவசியம் என்பது தொடர்பாக புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூமி ஒரு நிரந்தர கோடைக்காலத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், அலாஸ்காவின் வெப்பநிலை நியூயோர்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, புதுடெல்லியில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என MIT பல்கலைக்கழகம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதெற்கெல்லாம் தீர்வாக உலக மக்கள் அனைவரும் மரம் வளர்க்கவேண்டும் என்று சூழலியல் ஆர்வலளர்கள் கோருகின்றனர்.
அந்தவகையில், 17 டிரில்லியன் அல்லது 10 லட்சம் கோடி மரங்களை நட்டால் மாத்திரமே 2050 ல் இந்த பூமியில் மனிதர்களும், உயிரினங்களும் பிழைத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக தோன்றினாலும், அண்மைய ஆய்வு ஒன்று அதற்கான இடம் பூமியில் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
விளைநிலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் தவிர்த்து பூமி முழுவதும் சுமார் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் இடம் வெற்றிடமாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இவை மரம் வளர்க்க தகுந்த இடங்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மரம் நடும் பட்சத்தில் வளிமண்டலத்தில் உள்ள 25 சதவிகித காபன்டையொக்சைடை ஒக்சிஜனாக மாற்ற முடியும்.
அடுத்த 100 வருடங்களுக்கு இந்த பூமி முந்தைய 100 ஆண்டுகளில் எப்படி இருந்ததோ அவ்வாறே நம்மால் வைத்துக்கொள்ளவும் முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி மரம் வளர்க்க ஏதுவான நாடுகளாக ஆய்வில் பட்டியலிடப்பட்டவை ரஸ்யா (583,000 சதுர மைல்கள்), ஐக்கிய அமெரிக்கா (397,700 சதுர மைல்கள்), கனடா ( 302,700 சதுர மைல்கள்), அவுஸ்ரேலியா (223,900 சதுர மைல்கள்), பிரேசில் (191,900 சதுர மைல்கள்), சீனா ( 155,200 சதுர மைல்கள்) என புதிய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தால் மொத்த அமெரிக்காவின் பரப்பளவிற்கும் மரங்களை நட்டாக வேண்டும் என்பது தெளிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற சுவிஸ் பெடரல் பல்கலைகழக சூழலியல் பேராசிரியர் தோமஸ் கிரவுதர் (Thomas Crowther) கூறுகையில் “காடுகளின் அடர்த்தியை அதிகப்படுத்துவதன் மூலமாக 225 பில்லியன் தொன் கார்பன்டையொக்சைடை நம்மால் ஆக்சிஜனாக மாற்ற முடியும்.
கிட்டத்தட்ட நூறாண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய மொத்த அளவிலான காபனையும் இந்த திட்டத்தின் மூலம் வடிகட்டிவிடலாம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக