இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மோடி தலைமையிலான பாஜக அரசு முதல் முறை
பதவியேற்ற பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச யோகா
தினம்" கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஐந்தாண்டுகளில்
யோகா தினத்தைக் கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் ரூ.140 கோடியை செலவு செய்துள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை, சர்வதேச யோகா
தினத்தை ஒட்டி, ராஞ்சியில் பிரதமர் தலைமையிலான கூட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதற்காக 30,000 அதிகமாக இதில் கலந்து
கொண்டனர்.
நடப்பாண்டில் யோகா தினத்திற்கு ரூ.40
கோடி செலவு!
இந்த நிலையில் இந்த யோகா தின நாளை
கொண்டாட 40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாங்க..
ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ
ஆதாரங்களுடன், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தில் சுமார் 40 கோடி ரூபாய்
செலவிடப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம்
என்றும், கடந்த ஆண்டு இது 20 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது என்றும்
கூறியுள்ளது.
மற்ற செலவுகள்!
மேலும் கடந்த 2015 - 2017ம் ஆண்டில் இந்த
நிகழ்வை ஏற்பாடு செய்ய 73 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும்
தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் யோகா விளம்பரம் தவிர, இந்த விழாவில் பங்கேற்க
வரும் அனைவருக்கும் கலோரி நிறைந்த சிற்றுண்டி மற்றும் இனிப்புகள், குடிநீர்
வழங்கல், நினைவுச் சின்னங்கள், எழுதுபொருட்கள், கூடாரங்கள் மற்றும் பிற உபகரணங்கள்
அமைத்தல் போக்குவரத்தை அமர்த்துவது, விருந்தினர்களுக்கு உறைவிடம் மற்றும் போர்டிங்
வசதி என அனைத்தும் வழங்குவது என அனைத்தும் இந்த செலவில் தான் சேர்க்கப்படுகிறதாம்.
விளம்பரத்திற்காக ரூ.64 கோடி
அதோடு ஆயுஷ் அமைச்சின் செலவினத்தின் ஒரு
பகுதி, யோகா தின நிகழ்வை தூர்தர்ஷன் மற்றும் தனியார் சேனல்களில், ரேடியோ
ஜிங்கிள்ஸ், முக்கிய ஆங்கிலம், பிரந்திய மொழி செய்தித்தாள்களில் அச்சு விளம்பரம்
கொடுத்தற்காகவும் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வகையில் கடந்த
ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்காக விளம்பர கூறுக்காக ஆயுஷ் அமைச்சகம் 64 கோடி
ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கல்வி மற்றும் தொடர்பு கூறுகளுக்காக ரூ.52.60 கோடி!
இந்த நிலையில் 2019 - 2020 ஆம் ஆண்டில் கல்வி
மற்றும் தொடர்பு கூறுகளுக்காக அரசு 52.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும்
கூறப்படுகிறது. இதோடு யோகா தின நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தூதரகங்களின் வரவு
செலவுத் திட்டங்களை ஆதரிப்பதற்காக "சர்வதேச ஒத்துழைப்புக்காக" மற்றொரு
16 கோடி ரூபாயும் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக
பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக