இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆப்கானிஸ்தானில், வெடிபொருட்கள்
நிரப்பிய கார் வெடித்து சிதறியதில் 18 அபேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூலில், அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பிடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மேற்கு காபூலில் உள்ள காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரப்பிய கார் ஒன்று, திடீரென வெடித்து சிதறியது.
இதில் அருகிலிருந்த 20க்கு மேற்பட்ட கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்களும் நொறுங்கி, புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டு போரில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், பொதுமக்களில் 1,500 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக