இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு வாபஸ் பெற்றதிலிருந்து, காஷ்மீர்
பள்ளத்தாக்கில் அமைதி நிலவி வருவதால், பாகிஸ்தான் மிகவும் திகைத்துப்போய் உள்ளது.
கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்.ஓ.சி) அருகிலுள்ள பயங்கரவாதிகளின் பல குழுக்கள்
சுற்றித் திரிவதாக புலனாய்வு அமைப்புகளின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த
பயங்கரவாதிகளின் குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் உதவி கிடைக்கிறது. இந்த
பயங்கரவாதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்து
வருவதால், பள்ளத்தாக்கில் அமைதி சீர்குலையா நேரிடலாம் என்று உளவுத்துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம்,
காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு இந்தியா நீக்கியதால், இந்த விவகாரத்தில்
விரைவில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் விரும்பம்
தெரிவித்துள்ளது.
இப்போது
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஐ.நா.பாதுகாப்புக் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதி,
காஷ்மீர் பிரச்சினையில் உடனடியாக ஐ.நா தலையிட வேண்டும் என்று கூறியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட கடிதத்தின்படி, காஷ்மீர்
பிராந்தியத்தில் இந்தியா எடுத்த முடிவு குறித்து ஆலோசனை செய்யவும், காஷ்மீர்
விவகாரத்தில் உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு
சபையை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக