Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 14 ஆகஸ்ட், 2019

சீனாவை தாக்கிய லெகிமா புயல் : பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

சீனாவின் செஜியாங் மாகாணத்தை கடந்த சனிக்கிழமை லெகிமா புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 190 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த சூறாவளியால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன்பின்னர் ஷாங்டாங், அன்ஹூய் ஆகிய மாகாணங்களையும் லெகிமா புயல் தாக்கியது.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று புயல் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலரைத் தேடி வந்தனர்.

அதன்பின்னர் இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணியின்போது மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கை பேரிடரால் சுமார் 26 பில்லியன் யுவான் (3.7 பில்லியன் டாலர்) அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!