Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

வார்னிஷ் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

உலக நாடுகள்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

2018-19ஆம் நிதியாண்டின் ரிசர்வ் வங்கி வருடாந்திர அறிக்கையில், ரிசர்வ் வங்கி விரைவில் மக்களின் புழக்கத்திற்காக வார்னிஷ் பூசப்பட்ட 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தற்போது முதற்கட்ட சோதனையாக அறிமுகம் செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 இதனால் என்ன நன்மை..?

வார்னிஷ் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஜூலை 1, 2018 முதல் ஜூன் 30, 2019 வரையிலான காலத்தில் ரிசர்வ் வங்கி பாதுகாப்பான ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக 4,811 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, இதுவே கடந்த வருடம் 4,912 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாதுகாப்பு விடயங்களின் ஒரு பகுதியாகவே இந்த வார்னிஷ் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

 வாழும் காலம்
ரூபாய் நோட்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியம் அதனுடைய லைப்டைம், அதாவது வாழும் காலம். இந்நிலையில் ரூபாய் நோட்டுகளின் வாழும் கால அல்லது பயன்பாட்டுக் காலம் அதிகரிக்க வார்னிஷ் கோட்டிங் செய்யப்பட்ட 100 ரூபாய் நோட்டுகளைச் சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உலக நாடுகள்
2017-18 வருடாந்திர அறிக்கையில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளின் லைப்டைம் அதிகரிக்க முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் உலக நாடுகள் மத்தியில் ஆய்வு செய்ததில் வார்னிஷ் கோட்டிங் கொண்ட ரூபாய் நோட்டுகளின் லைப்டைம் சிறப்பாக இருப்பதாகவும், பழைய ரூபாய் நோட்டுகளை விரைவான காலத்தில் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதைக் கண்டுப்பிடித்துள்ளது.
தற்போது இந்த முறையில் நடப்பு நிதியாண்டில் அமலாக்கம் செய்து சோதனை செய்ய உள்ளது.

100 ரூபாய் நோட்டு
முதற்கட்டமாக இந்தியச் சந்தையில் அதிகப் பணப்புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாயை ரிசர்வ் வங்கி தேர்வு செய்துள்ளது. மார்ச் 2019-இன் தகவல்கள் படி மொத்த பணப்புழக்க சந்தையில் 47.2 சதவீதம் வகிக்கும் 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளைத் தேர்வு செய்துள்ளது. விரைவில் வார்னிஷ் பூசப்பட்ட 100 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டு வர உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!