
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விளையாட்டு
குழந்தைகளின் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. அதுபோல் குழந்தைகள்
மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்து விளையாடும்போது நல்ல நட்பும், புரிந்துக்கொள்ளும்
மனப்பான்மையும் ஏற்படும்.
நாம்
இன்று ஜோடி எங்கே கண்டுபிடி? என்னும் விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த
விளையாட்டை 20 முதல் 30 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
இந்த
விளையாட்டை தொடங்குவதற்கு முன்பு முதல் போட்டியாளரை தேர்வு செய்துக் கொள்ள
வேண்டும்.
பிறகு
மீதமுள்ள போட்டியாளர்கள் சம எண்ணிக்கையில் இரண்டு குழுக்களாக பிரிந்துக் கொள்ள
வேண்டும்.
இந்த
இரண்டு குழுவிலிருந்து ஒருவரை குழுத்தலைவராக தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்
முதல் குழுவில் உள்ள தலைவர் அவர்களின் குழுவில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒன்று,
இரண்டு என எண்ணை அடையாளமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்கள் என்னவென்று
இரண்டாம் குழுவிற்கு தெரியக்கூடாது.
பிறகு
இரண்டாம் குழுவில் இருக்கும் நபர்கள் ஏதாவது ஒரு எண்ணைச் சொல்ல வேண்டும். அந்த
எண்ணை அடையாளமாக கொண்ட முதல் குழுவில் உள்ள நபர் யாரோ அவரோடு ஜோடி சேர்ந்துக்
கொள்ள வேண்டும்.
உதாரணமாக
இந்த விளையாட்டில் 10 குழந்தைகள் இருந்தால் 1 முதல் 10 வரை உள்ள எண்களை அடையாளமாக
வைக்க வேண்டும். இந்த 10 எண்களுக்கு ஏதாவது ஒரு எண்ணைச் சொல்லி ஜோடி சேர்ந்துக்
கொள்ள வேண்டும்.
இப்போது
மைதானத்தின் நடுவில் பெரிய வட்டமொன்றை வரைந்து அதற்குள் சிறிய வட்டத்தை வரைந்துக்
கொள்ள வேண்டும்.
அதன்பின்
முதல் குழுவில் இருக்கும் நபர்கள் பெரிய வட்டத்திலும், இரண்டாம் குழுவில்
இருக்கும் நபர்கள் சிறிய வட்டத்திலும் நின்றுக் கொள்ள வேண்டும்.
பிறகு
வட்டத்தின் நடுவில் நிற்கும் முதல் போட்டியாளர் விசில் அடிப்பார். அப்போது முதல்
மற்றும் இரண்டாம் குழுவில் இருக்கும் நபர்கள் எதிரெதிராக வட்டத்தைச் சுற்றி ஓட
வேண்டும்.
ஓடிக்கொண்டிருக்கும்போது
முதல் போட்டியாளர் மீண்டும் விசில் அடிப்பார். அப்போது இரண்டாம் குழுவில்
இருக்கும் நபர்கள் ஓடுவதை நிறுத்திவிட்டு, முதல் குழுவில் இருக்கும் ஜோடியோடு
கைக்கோர்த்து நின்றுக்கொள்ள வேண்டும்.
அதற்குள்
முதல் போட்டியாளர் வேகமாக ஓடிச்சென்று, முதல் குழுவில் உள்ள ஏதாவது ஒரு ஜோடியின்
கையை பிடித்து நின்றுக் கொள்வார்.
அப்படி
முதல் போட்டியாளர் கையை பிடித்துவிட்டால், இரண்டாவது வட்டத்தில் உள்ள அவரது ஜோடி
அவுட் ஆகி விடுவார்.
அவுட்
ஆன நபர் முதல் போட்டியாளராக மாறி, மீண்டும் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக