
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி
நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது ஊன்றீஸ்வரர் கோவில். நீர்த்தேக்கத்தில் நீர்
குறையும் காலத்தில் பழைய கோவில் உள்ளே உள்ளதைக் காண முடியும்.
மூலவர்
: ஊன்றீஸ்வரர்.
உற்சவர்
: சோமாஸ்கந்தர்.
அம்மன்
: மின்னொளி அம்பாள்.
தல
விருட்சம் : இலந்தை.
பழமை
: 1000-2000 வருடங்களுக்கு முன்.
புராண
பெயர் : பழம்பதி, திருவெண்பாக்கம்.
ஊர்
: பூண்டி.
மாவட்டம்
: திருவள்ள ர்.
தல வரலாறு :
திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர்,
திருவொற்றியூரில் சிவசேவை செய்து வந்த சங்கிலியார் எனும் பெண்ணை சிவனை சாட்சியாக
வைத்து அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால்
அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார்.
சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை
விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார்.
சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு
கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை.
இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே
திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு
கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை.
பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான்
இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே! என்று சொல்லி வேண்டினார்.
சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவன், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும்
கொடுத்து 'நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்" என்றார்.
தன் நண்பனான சிவன் தனக்கே அருள் செய்யாமல்
விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தரருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண்
தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண்
தரவில்லை.
கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த
ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு
விட்டது. இதனால் நந்தியின் கொம்பு ஒடிந்துவிட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை
தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.
தல பெருமை :
சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை
வைத்துக்கொண்டு தடுமாறியபோது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக
கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின்
இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது.
தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை
கிடைக்கும் என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை
சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல்
போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் 'மின்னொளி அம்பாள்"
என்றும், 'கனிவாய்மொழிநாயகி" என்றும் அழைக்கப்படுகிறாள்.
வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன
உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள்
சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும்
என்கிறார்கள். வாழ்க்கையே இருண்டுவிட்டதாக கவலையில் இருப்பவர்களுக்கு அம்பாள் ஒளி
கொடுத்து வாழ வைக்கிறாள் என்பது நம்பிக்கை.
பிராத்தனை :
திருமணத்தடை
உள்ளவர்கள், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்கள் சுவாமி, அம்பாளுக்கு தேன்
அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக