Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

இந்திய விமானப் பயணங்களில் ’இந்த’ லேப்டாப் கொண்டு செல்ல மட்டும் தடை!

இந்திய விமானப் பயணங்களில் ’இந்த’ லேப்டாப் கொண்டு செல்ல மட்டும் தடை! 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

அதிகம் சூடாவதால் தீபிடிக்கும் அபாயம் உள்ள லேப்டாப்கள் சில 2015 செப்டம்பர் முதல் 2017 பிப்ரவரி இடையேயான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


இந்திய விமானப் பயணங்களின் போது பாதுகாப்புக் காரணங்களுக்காக மேக்புக் ப்ரோ லேப்டாப் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து ஆணையம் இனி ஆப்பிளின் மேக்புக் ப்ரோ 15 இன்ச் லேப்டாப் ரகங்களை விமானப் பயணங்களின் போது பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், “சில குறிப்பிட்ட முந்தைய மாடல் 15 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் பேட்டரி அதிகம் சூடு ஏறுவதாக ஆப்பிள் கண்டறிந்துள்ளது. அதிகம் சூடாவதால் தீபிடிக்கும் அபாயமும் உள்ளது. இந்த பாதிப்புள்ள லேப்டாப்கள் சில 2015 செப்டம்பர் முதல் 2017 பிப்ரவரி இடையேயான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


இதனால், லேப்டாப்-ன் சீரியல் எண் சோதிக்கப்பட்ட பின் பாதிப்புள்ள லேப்டாப் என்றால் ஆப்பிள் இலவசமாகவே அந்த லேப்டாப் பேட்டரியை மாற்றித் தரும்” எனக் குறிப்பிட்டுள்ளது. இதனாலே இந்தக் காலகட்டத்தில் வாங்கப்பட்ட லேப்டாப் என்றால் பயணிகள் அதனுடன் விமானப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!