Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 10 ஆகஸ்ட், 2019

எலியும் பூனையும்..

 Image result for எலியும் பூனையும்..

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


என்னதான் மொபைல்போன்களில் பல விளையாட்டுகள் வந்தாலும், நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து விளையாடும் விளையாட்டு தனி சந்தோஷத்தை தருகிறது என்று சொன்னால் மிகையாகாது.

வெளியில் நண்பர்களுடன் ஒன்றாக விளையாடுவதால் மனதிற்கு புத்துணர்ச்சியும், உடலிற்கு ஆரோக்கியத்தையும் தருகிறது.

சரி, இன்று நாம் பார்க்க இருப்பது கிராமப்புறங்களில் குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றான எலியும், பூனையும் விளையாட்டை பற்றித்தான்.

எத்தனை பேர் விளையாடலாம்?

எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.

விளையாட்டில் முக்கியமானவர் :

எலியும், பூனையும்

எப்படி விளையாடுவது?

இவ்விளையாட்டு சிறுவர், சிறுமியர்கள் உற்சாகமாக சேர்ந்து விளையாடும் விளையாட்டு ஆகும்.

முதலில் விளையாட்டில் பங்கு கொள்வோர் வட்டமாக நின்று கொள்ள வேண்டும். அவர்களில் ஒருவர் எலியாகவும், மற்றொருவர் பூனையாகவும் நடிக்க வேண்டும்.

எலியாக நடிப்பவர் வட்டத்திற்கு உள்ளேயும், பூனையாக நடிப்பவர் வட்டத்திற்கு வெளியேயும் இருக்க வேண்டும்.

இப்பொழுது பூனை, 'எலி என்ன செய்யுது?" என்ற வினாவோடு பாடலை தொடங்கும்.

பூனை : எலி என்ன செய்யுது?

வட்டத்தில் நிற்பவர்கள் : தூங்குது

பூனை : எலி என்ன செய்யுது?

வட்டத்தில் நிற்பவர்கள் : எழுந்திரிக்கிது

பூனை : எலி என்ன செய்யுது?

வட்டத்தில் நிற்பவர்கள் : பல் தேய்க்கிது

பூனை : எலி என்ன செய்யுது?

வட்டத்தில் நிற்பவர்கள் : சாப்பிடுது

இவ்வாறு பூனை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். வட்டத்தில் இருப்பவர்கள் எலியின் செயல்களுக்கு ஏற்ப பதில் கூற வேண்டும். (அதாவது எழுந்திரிக்கிது, பல் தேய்க்கிது, சாப்பிடுது)

கடைசியாக,

பூனை : எலி என்ன செய்யுது?

வட்டத்தில் நிற்பவர்கள் : வெளியே வரப் பாக்குது என்று கூறியவுடன் பூனை எலியை பிடிக்க தயாராகிவிடும்.

பூனை வட்டத்திற்கு உள்ளே வந்துவிட்டால் எலி வெளியே ஓடி விடும். பூனை வெளியே வந்தால் எலி வட்டத்திற்குள் ஓடிவிடும். ஆனால், வட்டத்தில் நிற்போர் எலிக்கு ஆதரவாக செயல்படுவர்.

அதையும் மீறிப் பூனை எலியைப் பிடித்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். அதன்பின் வேறொருவர் எலியும், பூனையுமாக மாறி விளையாட்டைத் தொடர்வார்கள்.

விளையாட்டின் பயன்கள் :

நடிப்புத்திறன் வெளிப்படும்.

பலம் உண்டாகும்.

குழு ஒற்றுமை மேம்படும்.

புத்துணர்ச்சியும், உற்சாகத்தையும் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!