Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 10 ஆகஸ்ட், 2019

ஸ்டீவ் ஜாப்ஸ்..

 Image result for ஸ்டீவ் ஜாப்ஸ்..

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஐபோன், ஐபேட் என்றால் நினைவிற்கு வரும் முதல் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 முந்தைய தலைமுறை வரைக்கும் ஆப்பிள் என்றால் நியூட்டன் தான் நினைவுக்கு வருவார். 1990க்கு பின் வந்த அனைவருக்குமே ஆப்பிள் என்றால் நினைவுக்கு வருவது ஸ்டீவ் ஜாப்ஸ் தான்.

 ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஆவார். மேலும், கணினியின் செயல்பாட்டை முழுவதும் கைக்குள் அடக்கிய மாமனிதரும் இவரே.

 புதுமை என்ற விஷயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பிலும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ், புதுமை என்று எதையுமே கூறிவிட முடியாது. அடுத்த நொடியே இதைவிட புதுமையான விஷயம் உருவாகிவிடும் என்பார்.

 'ஆப்பிள்" உலகின் மிகப்பெரிய பிரபலமான நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் பின்னணியில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் உலகமெங்கும் பலரால் விரும்பப்பட்டவராக இருந்தார்.

 அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம், 1985ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதியால், ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு வழங்கப்பட்டது.

 இவர் கண்ட கனவும் அதற்காக இவர் எடுத்த முயற்சிகளும் பிரம்மிக்க வைப்பவை. ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு தொழில்முனைவராக, கண்டுபிடிப்பாளராக, தொழில்நுட்பத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறார்.

இன்று உலகமே கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் வாழ்க்கை கதை மிகவும் சுவாரஸ்யமானது.

ஸ்டீவ் ஜாப்ஸ், 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். இவர் ஜாண்டாலி-ஜோயன் என்ற சிரிய-அமெரிக்க தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பால் ஜாப்ஸ்-க்ளாரா தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். வளர்ப்புத் தாய்-தந்தை இருவருமே அன்பைக் காட்டி ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ வளர்த்தனர்.

ஸ்டீவ் ஜாப்ஸை தத்து கொடுத்த பின், ஜாண்டாலி-ஜோயன் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் குழந்தை, தான் வளர்ந்த பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்து கொண்டாள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் இளம் வயதிலேயே ரேடியோ, டி.வி போன்ற மின்னணு பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வம் தான் இவருக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையே உறவை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் இளம் வயதில் நன்றாக படித்தார். இவரது படிப்பைப் பாராட்டி இரண்டு வகுப்புகள் கூடுதலாகப் பாஸ் போடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், இவரது பெற்றோர்கள் ஒரு வகுப்பு மட்டுமே கூடுதலாகப் பாஸ் போட்டால் போதும் என்று கூறிவிட்டனர்.

ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் :

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு புத்திசாலி. வர்த்தக ஆர்வலரும் கூட. ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வாஸ்னியாக் இருவருக்கும் தொழில்நுட்ப ஆர்வம் இருந்ததால் சிறந்த நண்பர்களாக இருந்தனர். வாஸ்னியாக் கணினி விஷயத்தில் அதீத ஆற்றல் பெற்றிருந்தார். நாட்கள் செல்லச்செல்ல இருவருக்குமான நட்பு வலுப்பெற்றது.

ஸ்டீவ் ஜாப்ஸ், தன் பெற்றோரின் நிலையை கண்டு ரீட் கல்லூரியில் 18 மாதம் படித்துவிட்டு இடைநிறுத்தம் செய்தார். கல்லூரியில் இவருக்கு பிடித்த ஒரே வகுப்பு காலிக்ராபி எனப்படும் கலைநயத்தோடு எழுத்துக்களை எழுத கற்றுத்தரும் வகுப்புகள். அந்த வகுப்புகளில் கலந்துகொண்டதன் மூலமே ஆப்பிள் தயாரிப்புகளில் விதவிதமான ஃபாண்ட்-களை அறிமுகப்படுத்தினார் ஜாப்ஸ்.

கல்லூரியிலிருந்து இடைநிறுத்தம் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ் அடுத்த ஆண்டே வீடியோ கேமில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்த அட்டாரியில் வேலைக்கு சேர்ந்தார்.

அந்த வேலையிலும் ஈடுபாடு குறைந்ததால், தன் நண்பர் வாஸ்னியாக் நடத்திக் கொண்டிருந்த கணினி கிளப்புடன் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அந்த காலத்தில் கணினி என்பது மிகப்பெரியதாக அதாவது ஒரு பெரிய வீட்டின் அளவு இருக்கும். எனவே, அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் எளிய சாதனத்தை உருவாக்குவதே ஸ்டீவ் ஜாப்ஸின் நோக்கமாக இருந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ், மிகவும் எளிமையான மனிதர். கருப்புநிற கழுத்து மூடிய சட்டை, ஜீன்ஸ் மற்றும் ஷூ அணிவதே இவரின் வழக்கம். அவரின் டர்ட்டில்நெக் சட்டை மற்றும் லெவீஸ் ஜீன்ஸ் பலரால் புகழப்பட்டது.

உடன்பிறந்த சகோதரி :

பிரபல எழுத்தாளர் மோனா சிம்ப்சன், ஸ்டீவ் ஜாப்ஸின் சகோதரி ஆவார். அவர் தன் சகோதரி என பின்னாளில்தான் ஸ்டீவ் கண்டுபிடித்தார். மோனா எழுதிய முதல் நாவலில், அவருக்கும் அவரின் பெற்றோருக்குமான உறவைப் பற்றி எழுதியிருந்தார். மோனாவின் பெற்றோரே தன் பெற்றோர் என்று ஜாப்ஸ் அப்போதுதான் தெரிந்து கொண்டார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்-புத்த மதம் :

ஒருநாள் 'லைப்" மாத இதழில் நைஜீரியாவின் மெலிந்த பசி கொண்ட மக்களைப் பார்த்துவிட்டு, வேகமாக சர்ச்சுக்கு சென்று பாதிரியாரிடம், 'ஏன் இப்படி கடவுள் பாரபட்சமாய் உயிர்களைப் படைத்துள்ளார் ஃபாதர்?" என்று கேட்டார். 'உனக்கு இது புரியாது" என்று பாதிரியார் பதில் சொல்ல, 'எனக்குப் புரியாதது தேவையில்லை" என்று தன் மதத்தைக் கைவிட்டார், ஸ்டீவ் ஜாப்ஸ்.

1974ம் ஆண்டு ஆன்மீக அமைதியை தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திரப் பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தொடக்கம் :

ஸ்டீவ் ஜாப்ஸ், 1976ல் ஸ்டீவ் வாஸ்னியாக், ரொனால்ட் வெய்ன் ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனம் (Pixer Animation Studio), வால்ட் டிசினி போன்ற பல நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆப்பிள்-1 என்ற மாடல்தான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கம்ப்யூட்டர் ஆகும். Personal Computer என்ற வகையில் இவர்களது முதல் முயற்சி இதுதான். முழுக்க முழுக்க இதை வடிவமைத்தது ஸ்டீவ் வாஸ்னியாக். இதன் விற்பனையை ஸ்டீவ் ஜாப்ஸ் பார்த்துக் கொண்டார். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதை தொடர்ந்து ஆப்பிள்-2வை மிக அழகாய் உருவாக்கினார்கள். சிறு முதலீடு இல்லாத அன்றைய ஆப்பிள் நிறுவனத்தில் கம்ப்யூட்டரை வடிவமைத்து அந்த வருடம் நடந்த கம்ப்யூட்டர் கண்காட்சியில் ஸ்டால் முழுக்க வித்தியாசமான அலங்கரிப்புடன் ஆப்பிள்-1, ஆப்பிள்-2 மாடல்களைப் பார்வைக்கு வைத்தனர். ஆப்பிள்-2வின் தோற்றத்தில் மயங்கிய மக்கள் எக்கச்சக்கமாய் ஆர்டர்களைக் குவித்தனர்.


இவர்கள் ஆரம்பித்த இந்த நிறுவனத்தின் இரண்டாவது மாடல் கம்ப்யூட்டர் ஆறு வருடங்களில் 751 மடங்கு லாபத்தை ஈட்டித் தந்தது. இன்றளவிலும் அமெரிக்க தொழில் முன்னேற்ற வரலாற்றில் மிக முக்கிய இடம், இந்த நிறுவனத்திற்கு இருக்கிறது.

மாக்கின்டோஷ் :

1980-களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறன்மிக்க மாக்கின்டோஷ் (Macintosh) கணினியை அறிமுகப்படுத்தினார் ஸ்டீவ் ஜாப்ஸ். இதில்தான், மென்பொருள் உருவாக்கத்தில் பில்கேட்ஸ் உடன் முதல் கூட்டணி வைத்தார்.

மாக்கின்டோஷ் விளம்பரம் வித்தியாசமானதாக இருக்கவேண்டும் என்று ஹாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனரான ரிட்லி ஸ்காட்டை அணுகினார். அந்த விளம்பரம் உலகெங்கும் பேசப்பட்டாலும் மாக்கின்டோஷ் தோல்வியைத் தழுவியது. ஆனால், லெட்டர் பிரஸ் முறையை மாற்றி பதிப்புத்துறையில் மிக முக்கிய மாற்றத்தை செய்தது. பின்னாளில் ஆப்பிள் நிறுவனத்தில் உள்ள குழு உறுப்பினர்களிடம் கருத்து மோதல்கள் ஏற்பட்டது.

1988-ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஸ்டீவ் ஜாப்ஸ், உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஸ்ட் (Next) என்னும் கணினித்தள நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால், இது தோல்வியை தழுவியது.

பின் Pixer அனிமேஷன் நிறுவனத்தில் இணைந்தார், அதுவும் ஆரம்பத்தில் தோல்வி அடைந்து பின் அசுர வளர்ச்சி கண்டது. காந்தி, சாப்ளின், ஐன்ஸ்டீன் என பல ஆளுமைகளின் படங்களில் "Think Different" என்ற எழுத்துகள் தாங்கிய பதாகைகளுடன் விளம்பரம் செய்ய ஆரம்பித்தார் ஜாப்ஸ்.

1998-ல் வெளியான ஐமேக் மாடலுக்காகத்தான் அந்த விளம்பரம். அது விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை தந்தது. அடுத்தடுத்து ஆப்பிள் ஸ்டோர், ஐபாட் என தொட்டதெல்லாம் வெற்றி.

1991-ல் லாரன் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

மீண்டும் ஆப்பிளில் இணைந்தார் :

ஆனால், 1996ல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்கியப்பின், ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாளராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார். ஆப்பிளை விட்டு வெளியே இருந்த சமயத்தில் தான் பல புதிய விஷயங்களை செய்ய முடிந்தது என்றும், சுதந்திரமான பொழுதுகள் அப்போது அவருக்கு கிடைத்ததாகவும் பின்னர் தெரிவித்தார்.

புதிய பொருளை வாங்கி அதை பிரித்து பார்க்கும் ஒருவரின் உணர்வுகளையும், சந்தோஷத்தையும் புரிந்துகொள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தனிக்குழு ஒன்றை கொண்டிருந்தார். இந்த உணர்வுகளை ஆப்பிள் தயாரிப்புகளில் இன்றும் காணமுடியும்.

Personal Computer வரலாற்றில் முதன்முதலில் கம்ப்யூட்டர் வாங்கியவர்களில் 36% பேர் ஆப்பிளை வாங்கியவர்கள்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்கள் அனைத்துமே, அனைவராலும் விரும்பி பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

பெயர் காரணம் :

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் நிறுவனத்திற்கு 'ஆப்பிள்" என்று பெயரிட்டதன் காரணத்தை பற்றி பலரும் விவாதித்துள்ளனர். பழங்கள் விரும்பியான ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி ஆர்கானிக் பழங்கள் விளையும் நிலங்களுக்கு செல்லும்போது மனதில் தோன்றிய பெயரே ஆப்பிள் என்று கூறப்படுகிறது.

ஆனால், ராபர்ட் என்ற ஆன்மீக குருவின் ஆப்பிள் தோட்டம் மிகவும் பிடித்திருந்ததால், நிறுவனத்திற்கு ஆப்பிள் என்று பெயர் வைக்க அதுவும் ஒரு காரணம் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருக்கிறார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் சுமார் 300 தயாரிப்புகளுக்கு தன் பெயரில் காப்புரிமையை கொண்டுள்ளார். ஆப்பிள் ஸ்டோர்களில் உள்ள கண்ணாடி படிக்கட்டுகளுக்கு கூட காப்புரிமை வைத்துள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் - சிறந்த பேச்சாளர் :

ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர் ஆவார். 2005ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.

நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனக்கூறி கதையை துவங்கினார். அந்த மூன்று கதைகளையும் பின்வருமாறு பார்ப்போம்.

முதல் கதை : புள்ளிகளை இணைப்பது

திருமணமாகாத என் பெற்றோர்கள், நான் பிறந்தவுடனேயே வளர்ப்பு பெற்றோர்களுக்கு என்னைத் தத்து கொடுத்துவிட்டனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். வளர்ப்பு பெற்றோர்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் என் கல்லூரி படிப்பிற்காக செலவிடுவதை நான் விரும்பவில்லை. எனவே, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறிவிட்டேன். முழுமை பெறாத என்னுடைய கல்லூரி படிப்பு எதிர்காலம் பற்றிய பயத்தை ஏற்படுத்தியது.

நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். பல மைல் தூரம் பயணம் செய்து கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள் தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும், தன்னம்பிக்கையையும் வளர்த்தன. பல துயரங்களோடு சென்று கொண்டிருந்த எனது வாழ்வில், காலிக்ராபி எனப்படும் கலைநயத்தோடு எழுத்துக்களை எழுத கற்றுத்தரும் வகுப்புகள் மீது ஆர்வம் அதிகரித்தது. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, 'மாக்கின்டோஷ்" கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், 'டைப்போகிராபி" (அச்சுக்கலை) கொண்டது.

நான் கல்லூரி படிப்பை பாதியிலேயே விடாமலிருந்தால், காலிக்ராபி கற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் உலகத்தின் கணினிகள் அழகான எழுத்துகளை பார்க்காமலேயே போயிருக்குமோ என்னவோ!!

கல்லூரி படிப்பை தொடர்ந்து இருந்தால் இந்த புள்ளிகளை என்னால் இணைத்திருக்க முடியாது. நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்ததால் தான் இந்த புள்ளிகளை இணைக்க கூடியதாக இருந்தது. இந்த புள்ளிகள் நம் எதிர்காலத்தையும், இலட்சியத்தையும் இணைக்கக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை நம் வாழ்வில் நமக்கு வர வேண்டும், என்று முதலாவது கதையை முடித்தார்.

இரண்டாவது கதை : லவ் அண்ட் லாஸ்

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினேன். 10 ஆண்டுகள் உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 10 ஆண்டுகள் கழித்து எனது 30வது வயதில் மாக்கின்டோஷ் வெளியானது. அப்போது என் கனவு நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா? என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன்.

அப்போது எனது இலட்சியத்தின் மீது இருந்த காதல் இன்னும் அதிகரித்தது. நிராகரிக்கப்பட்டாலும் எனது காதல் குறையவில்லை. ஆப்பிளிலிருந்து நான் வெளியேற்றப்பட்டது ஒரு மகத்தான விஷயம். வெற்றியின் கணம் எனக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நான் உணர ஆரம்பித்தேன். அதற்கு பிறகு என் வாழ்வில் அடுத்தது என்ன? என்ற கேள்வியோடு ஆரம்பித்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 'நெக்ஸ்ட்" மற்றும் 'பிக்ஸர்" ஆகிய நிறுவனங்களை துவங்கினேன்.

அப்போது தான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. 'பிக்ஸரின்" முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான 'டாய் ஸ்டோரி" உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், 'நெக்ஸ்ட்டை" வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.

ஆப்பிள் நிறுவனத்திலிருந்து நான் நீக்கப்படாமல் இருந்திருந்தால் இது எதுவுமே சாத்தியமில்லை. கசப்பான மருந்துகள் தான் வாழ்க்கையில் நோய் தீர்க்கும். வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் ஒரு கல்லாக மாறி உங்களை தாக்கலாம். ஆனால், அப்போதும் உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

எதை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை கண்டுபிடியுங்கள். தொழில் என்பது வாழ்வின் ஒரு முக்கியமான பகுதி. அதை நீங்கள் நேசிப்பதாக இருந்தால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக, மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று தனது இரண்டாவது கதையை முடிக்கிறார்.

மூன்றாவது கதை : இறப்பு

சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும். 'உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒருநாள் உங்கள் லட்சியம் நிறைவேறும்" என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக்கொண்டு வேலைகளை துவங்குவேன்.

விரைவில் மரணம் என்னை தழுவும் என்ற எண்ணம் நம் வாழ்வில் நல்ல தெளிவுகளை மேற்கொள்ள உதவும். பொறுமை, கோபம், எதிர்காலம் பற்றிய பயம், எதிர்பார்ப்புகளால் வரக்கூடிய விரக்தி இதுபோன்ற பல விஷயங்களை பற்றி வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும். மரணம் என்னும் ஓர் விஷயம் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன? என்றுக்கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன்பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துக்களை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். 'பசியோடு இருங்கள்... புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்". இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.

ஆப்பிள் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரண படுக்கையில் கூறிய செய்தி :

ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் ஒரு வார்த்தை 'உனக்கு எது சரியெனப்படுகின்றதோ, அதையே செய்" என்பதுதான்.

உங்களிள் காரை ஓட்ட டிரைவர் ஒருவரை நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால், ஒரு நோய் என்று வரும்போது அதை வாங்கிக்கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

எந்த பொருள் தொலைந்தாலும் அதை திரும்ப கண்டுபிடித்துவிடலாம். ஆனால், வாழ்க்கை தொலைந்து விட்டால் அதை கண்டுபிடிக்கவே முடியாது.

உலகம் என்னும் நாடக மேடையில் நாம் அனைவரும் நடிகர்கள். நாடகம் எப்பொழுது முடியும் என்பது யாருக்கும் தெரியாது. திரை எப்பொழுது வேண்டுமானாலும் கழன்று விடலாம்.

நாம் பக்குவமடையும் பொழுதுதான் சில விஷயங்கள் நமக்கு புரியும். 30 ரூபாய் கடிகாரமானாலும் சரி, 3 லட்சம் ரூபாய் கடிகாரமானாலும் சரி ஒரே நேரத்தைத்தான் காட்டும்.

செலவழிக்கும் வாய்ப்பு இல்லாதபோது நம் கையில் 100 ரூபாய் இருந்தாலும், 1 கோடி ரூபாய் இருந்தாலும் அது ஒன்றுதான்.

நீங்கள் தனிமையில் இருக்கும்போது 300 சதுரடி வீட்டிலிருப்பதும், 30,000 சதுரடி வீட்டிலிருப்பதும் ஒன்றுதான்.

பணத்தை சேமிப்பதை விட சுற்றத்தாரின் அன்பை சேமிப்பதே உண்மையான சொத்து மற்றும் சந்தோஷம் என்று கூறினார்.

நெகிழ வைக்கும் இறுதி நாட்கள்... ஸ்டீவ் ஜாப்ஸ்!!

ஸ்டீவ் ஜாப்ஸ், தனக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதை கடந்த 2004ஆம் ஆண்டே தெரிந்து கொண்டார். இதனால் பல வேதனைகளையும், துன்பத்தையும் அனுபவித்தார். அதைத் தொடர்ந்து பல சிகிச்சைகள் மேற்கொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.

இருப்பினும் தனது இறுதி நாட்கள் நெருங்கிக்கொண்டிருப்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் உணர்ந்தார். அதனால் தனக்கு மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார். அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவியது.

இதைதொடர்ந்து நண்பர்கள் அவரது ஆல்டோ இல்லத்திற்கு தினசரி வருகை தர ஆரம்பித்தனர். குறிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் தனது ராஜினாமாவை அறிவித்த நாளிலிருந்து ஏராளமான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

வீட்டிற்கு வருகை தரும் நண்பர்களை வரவேற்று, நன்றி சொல்லி அனுப்ப முடியாத அளவுக்கு களைத்துப் போனாராம் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லூரென். இறுதிநாள் நெருங்க நெருங்க, தன் வீட்டில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு மெலிந்து பலவீனமாகிவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனாலும் தனது இறுதி பயணத்தில் யார் யாருக்கெல்லாம் பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்று தனது மனதிற்குள் ஒரு பட்டியலிட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பரை அழைத்து தன் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் பதிப்பான 4 எஸ் மாடலை வடிவமைத்தவர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து அதை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என கடைசியாக அறிவுரைகள் தந்துள்ளார் ஸ்டீப் ஜாப்ஸ்.

ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் இருந்தபோது, அவருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து அழைத்துள்ளனர். ஆனால், அவை எதையும் ஏற்க மறுத்துவிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

தன் மகள்களுடனும், மகனுடனும், மனைவியுடனும் பெரும்பாலான நேரத்தை செலவழித்தார். தன் வாழ்நாளில் திருமண நாளையே கொண்டாடாதவர், கடைசித் திருமண நாளை 2011-ல் கொண்டாடினார்.

2011ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த ஆப்பிள் மாநாட்டில் பில்கேட்ஸஷுடன் கலந்து கொண்டார். அன்று க்ளவுட் கம்ப்யூட்டிங்கை அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சியாகும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் மரணப்படுக்கையில் இருந்தபோது தனது கல்லீரலை தானமாக தர ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் முன் வந்தார். எனினும், ஜாப்ஸ் அதற்கும் சம்மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம்..!!

நண்பர்கள் தொடர்ந்து ஸ்டீவ் ஜாப்ஸை பார்த்து வந்தாலும், இறுதி வாரங்களில் இவரின் வீடு முழுக்க செக்யூரிட்டிகள் மயமாக இருந்ததாம். கேட் பூட்டப்பட்டு, எப்போதும் இரு கறுப்பு நிற சொகுசு வாகனங்கள் தயாராக இருந்தன. வேறு யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை.

ஆனால், 2011ஆம் ஆண்டு அக்டோபர் 06ஆம் தேதி வியாழக்கிழமையன்று கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டன. அந்த இடம் முழுக்க மலர்கள், ஒரு வாய் கடிக்கப்பட்ட ஆப்பிள்கள், மலர் வளையங்கள் என நிரம்ப ஆரம்பித்துவிட்டன!

ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன் உச்சரித்த அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தம் இதுவரை யாருக்கும் புலப்படவில்லை. அவர் சொன்ன, 'ஓஹ் வாவ்..." என்பதற்கு பின்னால் இருந்த உண்மை காரணம் மர்மமாகவே உள்ளது. அவர் எதைக் குறிப்பிட்டு இவ்வார்த்தைகளை உச்சரித்தார் என்று தெரியவில்லை.

கூகுளுக்கும், ஆப்பிளுக்கும் கடும் வர்த்தகப் போர் நடந்தாலும், ஒருமுறை சி.இ.ஓ.வாக இருக்குமாறு கூகுள் நிர்வாகம் இவரை கேட்டுக் கொண்டது. ஆனால், அதை நாசூக்காக மறுத்துவிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

56 வயதில் இந்த சாதனையாளர் மறைந்ததை, ஒரு தொழிலதிபரின் மரணமாகப் பார்க்காமல், உலக சமூகம் ஒரு கண்டுபிடிப்பாளரை இழந்ததாகப் பார்க்கிறது. மரணம் வரை ஆண்டுக்கு வெறும் 1 டாலர் மட்டுமே சம்பளமாக இவர் பெற்று வந்தார். ஆனால், இவர் ஆப்பிள் நிறுவனத்தில் மட்டும் 5.426 மில்லியன் பங்குகளையும், டிஸ்னியில் 138 மில்லியன் பங்குகளையும் வைத்திருந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஒரு பெரிய சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக கருதி நடந்து கொண்டதே இல்லை. ஒரு சாதாரண மனிதனை விட பல மடங்கு இயல்பாக அனைவரிடமும் பழகி அன்பு காட்டினார். மற்றவர்களின் தேவைக்காக கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த குணம்தான் யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை, மக்களின் அன்பை இவருக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது.

கூகுள் :

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்கு தனது ஹோம் பேஜிலேயே இரங்கல் வெளியிட்டு கௌரவித்தது கூகுள்.

பாரக் ஒபாமா :

டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர், ஒட்டுமொத்தமாக பல தொழில்களுக்கு புது அர்த்தம் தந்தவர். அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலானோர் தெரிந்து கொண்டனர் என்பதைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது என்று தமது அஞ்சலியில் பாரக் ஒபாமா குறிப்பிட்டார்.

பிரபல சாதனையாளர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும் வெகு சீக்கிரத்தில் மரணம் அழைத்து கொண்டு செல்கிறது.

இதில் ஸ்டீவ் ஜாப்ஸஷும் விதி விலக்கல்ல... என்பதை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக